ஓடும் பிரஞ்சு தொடரியில் பிரஞ்சு மொழியில் நாம் பாடும் திருக்குறள் இடம்பெற்றது:
ஆங்கிலமும் பிரஞ்சுமே உலகின் தலையாய மொழிகள் என்றும் உலக மொழியாக பிரஞ்சு மொழி அமைவதற்கு வாய்ப்பு நேரலாம் என்று அறிஞர்
எச் ஜி வெல்ஸ் எழுதினார்.எனவே ஆங்கிலத்தில் எந்த நூல் வெளிவந்தால் அடுத்த கணம் அல்லது ஒத்த நேரத்தில் பிரஞ்சு மொழியிலும் மொழியாக்கம்
வெளிவரும் என்பர்.
அந்த வகையில் பிரஞ்சு மொழியில் எட்டுக்கு மேல் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்,நூறாண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டன.
பிரஞ்சு கலை பண்பாட்டுக்கழகம்,புதுவைத்தமிழர்களும்,
ஈழத்தமிழர்களும் இந்தப்பணியில்
ஒருங்கிணைந்து இருப்பார்கள் என நம்பலாம்.மேலும் மூன்றாம் உலகத்தமிழ் மாநாடு பாரி மாநகரிலேயே நடைபெற்றதும் அறிஞர் பில்லியோசா
தலைமைத்தாங்கி நடத்தியதும் பெருமிதமாக நினைவுக்கூரலாம்.

Add a Comment