திருடனும் காவல்காரனும் மோதிக்கொள்வார்கள்.தமிழகத்தில் ஒரு பேராசிரியரும் காவல்துறை அலுவலரும் மல்யுத்தம் நடத்துவதை மக்கள் ஆர்வத்தோடு கண்டுக்களித்தார்கள்.எவன் எதைச்செய்வது என்று எவனக்கும் புரியவில்லை!
ஒரு பல்கலைக்கழகத்தில் 65 பேராசிரியர்கள் பதவி விலக்கம் பெற்றிருக்கிறார்கள் அதனால் என்ன? எந்தப்பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களும்
மாணவர்களும் இருந்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது.
செஸ் ஆடுகிறவனுக்கும் கிரிக்கெட் ஆடுகிறவனுக்கும் 20 கோடி ரூபாய் வந்திருக்கிறது.ஒரு பேராசிரியர்க்கு ஒரு அறிஞர்க்கு ஓர் இலக்கம் ரூபாய் பரிசு கிடைக்கிறது என்றால் விண்ணப்பம் போட்டு நீள் வரிசையில் நிற்கிறார்கள்…

Add a Comment