புலமைப்பித்தன் வரிகளுக்கு பரத்வாஜ் இசையில் ஸ்ரீ விஷ்வ வித்யாலயா மேனிலைப் பள்ளி வண்டலூர் 106
மாணவியர் 13/4/2012 பாடியது:
வசந்தமே வருக
வருக! வருக! வசந்தமே வருக!
அம்மா. . . அம்மா. . . எங்கள்
அம்மா. . . அம்மா. . .
எங்களுக்கெல்லாம் பிடித்த அம்மா. . .
புரட்சித் தலைவி அம்மா. . .
அன்பெனும் ஜீவநதியே – எங்கள்
அம்மா அம்மா !
ஆயிரம் காலம் வாழ்க நீ – எங்கள்
அம்மா அம்மா!
சித்திரை மாதப் பௌர்ணமித் திங்கள்
போல நீ வருக! வருக!
செந்தமிழ் நாடு வந்தனை செய்து
வாழ்த்தவே நீ வருக! வருக!
அம்மா. . . அம்மா. . . எங்கள்
அம்மா. . . அம்மா. . .
எங்களுக்கெல்லாம் பிடித்த அம்மா. . .
புரட்சித் தலைவி அம்மா. . .
வீரமே கருணை ஈரமே – தர்ம
வெற்றியே வருக! வருக!
ஞானமே தமிழர் மானமே – புகழின்
வானமே வருக! வருக!
சோதனை யாவும் வென்ற தாய் – எங்கள்
சொந்தமாய் இங்கு வந்த தாய் – மக்கள்
வேதனை யாவும் தீர்த்த தாய் – பகை
வீழ்த்தவே ஒரு கை பார்த்த தாய்
சாதனை நூறு கண்ட தாய் – வாழும்
சரித்திரம் ஆகி நின்ற தாய்!
எங்கள் தாயாகி வந்த தாய் – முன்
னேற்றம் நாட்டுக்குத் தந்த தாய்!
அம்மா. . . அம்மா. . . எங்கள்
அம்மா. . . அம்மா. . .
எங்களுக்கெல்லாம் பிடித்த அம்மா. . .
புரட்சித் தலைவி அம்மா. . .
சித்திரை மாதப் பௌர்ணமித் திங்கள்
போல நீ வருக! வருக!
செந்தமிழ் நாடு வந்தனை செய்து
வாழ்த்தவே நீ வருக! வருக!

Add a Comment