POST: 2012-03-12T12:23:38+05:30

சங்கப்புலவர்களுள் முடிமணியாக விளங்கும் நல்லிசைப்புலவர் திலகம் கபிலர் ஆவார்.கபிலரின் புலமையை சங்கப்புலவர்கள் பெயர் சூட்டி பாராட்டியுள்ளனர்.தமிழகத்தின் தாவரவியலில் 99 பூக்களின் பெயர்களை தொடுத்தப்பெருமை
கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் சிறப்பாகும்.வோர்ட்ஸ்வொர்த்க்கு கூட இவ்வளவு பூக்களை எண்ணமுடியுமா என்றுத் தெரியவில்லை.
வள்ளல் பாரியின் தோழராகவும் பாரி மகளிரின் காவலராகவும் திகழந்தார் என்பதை நாடு நன்கறியும்.
பாரியின் பரம்பு மலையின் வரம்பில்லாத அன்பை பாடும் கபிலர் பாட்டு நலம் ஈடற்றதாகும்.
கபிலம்-பேராசிரியர் ம ரா போ குருசாமி அவர்களின் நூல்,நாட்டார் எழுதிய முதல் நூலை ஒட்டிப்பிறந்த விரிவான விளக்க நூலாகும்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *