ஏறு தழுவுதல்,மாடு பிடித்தல்,மஞ்சு விரட்டு என்ற பெயர்களெல்லாம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சிக்கு பெயர்களாக உள்ளன.தமிழர் வீரம் என்று பேசுகிறவர்களுக்கு இந்த சொற்கள் மறந்து,நல்ல வேளையாக Bull taming என்ற வார்த்தையை சொல்லாமல் இருக்கிறார்கள்.ஜல்லிக்கட்டு என்பது தெலுங்குச் சொல்லாக இருக்காலாமோ என்று ஐயப்படுகிறேன்
மாடுகளை அடக்குவது பழங்காலத்து விளையாட்டாக இருக்கலாம்.மாடுகளோடு மகிழ்ச்சியாக விளையாடுவது தான்
இந்த வடிவம் பெற்றுள்ளது.மாடுகளின் கழுத்தில் மேல் இருக்கும் திமில்கள் மேலை நாட்டு கால்நடைகளில் காணப்படுவதில்லை!
கொம்பும் கூட இவ்வடிவத்தில் இல்லை.ஸ்பெயின் நாட்டு எருதும் இந்தக்காட்சியை எதிரொலிக்கிறது.சிவந்த ஆடைகளைக் கண்டால் மாடுகள் மிரளும் என்பதனால் ஸ்பெயின் வீரர்கள் சிவந்த ஆடைகளை எதிரில் காட்டி எருதுகளை மருட்டுவார்கள்.
புலிகளை பெண்கள் அடக்கினார்கள் என்று ஒரு பழம்பாடல் உண்டு.சீறி வரும் புலி தன்னை சிங்கார குறத்தி முறத்தினாலயே துரத்தினாலே என்பது திரைப்பாடலாக தமிழ்க்கவிஞர் உடுமலை நாராயணக்கவி பாடினார்.தறுதலைகள் எழுதும் கொலைவெறிப்பாடல் போல அல்ல!

Add a Comment