POST: 2012-01-05T23:41:56+05:30

தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்ற மொழிக்கேற்ப வேளாண்மை தொடங்கி விண்வெளி வரை வளர்ந்துள்ள அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியின் ஆட்சி நாளும் வளர்ந்து புதுமைகள் பெருகி வருகின்றன.

கைநோக அங்கும் இங்கும் கண்கள் தேடிப்பார்க்கப் பல்வேறு பெட்டகங்களிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்துச் சேர்த்து அச்சிட்ட காலம் ஒன்றிருந்தது. பிறகு தட்டச்சு முறை வந்தது. இப்போதோ கணித்திரையில், விரல்களின் திறத்தினால் உரிய மென்பொருளைப் பொருத்தி எந்த மொழியையும் விரைந்து தட்டி முடிக்கின்ற தட்டும் கலைக்குத்தான் டிடிபி (DTP) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

அமர்ந்தபடியே தட்டச்சு முறையில் சோர்வில்லாமல் ஆயிரம் பக்கங்களை முடிக்கின்றனர். இந்த வினைத்திறப் பயிற்சிப் பெறுவதற்கு இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இப்போது முன் வந்திருக்கிறார்கள். பலநூறு பதிப்பகங்களில் வேலை வாய்ப்புகள் பல்கியுள்ளன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *