உணவானது ஒருவனுடைய நேரத்தை நான்கு பிரிவாகப் பிரிக்கின்றது.
1)காலை உணவுக்கு முன்னுள்ள நேரம்
2)காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடையிலுள்ள நேரம்
3)பகல் உணவிற்கும் இரா உணவிற்கும் இடையிலுள்ள நேரம்
4)இரா உணவிற்கும் படுக்கைக்குச்செல்வதற்கும் நடுவிலுள்ள நேரம்
அதே மாதிரி ஒரு மனிதனுடைய வேலையையும் நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்
1)தசைநார்களின் வேலை
2)விரல்களின் வேலை
3)மூளையின் வேலை
4)சமூக வேலை
எனவே ஒருவன் விடிந்ததும் உடல் உழைப்புச் செய்ய வேண்டும்.அதன் பின் விரல்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.மூன்றாவதாக மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும் கடைசியாகச் சமூக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றார் லியோ நிக்லோவிச் டால்ஸ்டாய்…. .

Add a Comment