POST: 2025-08-11T10:45:45+05:30

சென்னை கம்பன் கழகம் கம்பன் விழா 2025 பொலிவுமிகு பொன் விழா நிறைவு கம்பன் விழா 51 முத்தமிழ் மணக்கும் மூன்று நாள்கள் ஆகஸ்ட் 8,9, 10 வெள்ளிக்கிழமை மாலை சனிக்கிழமை காலை மாலை ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்வுகளைக் கண்டு கேட்டு மகிழ்ந்தேன்

POST: 2025-08-10T08:47:22+05:30

மூத்தோரிடம் கற்க வேண்டிய பாடம் மூத்த தமிழ்ப் பேராசிரியர் எழுத்தாளர் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 96 ஆம் பிறந்தநாள் மங்கல விழா ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதோடு அவருக்கு நூல் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அப்பாவைக் குறித்த நூலினை உடன்படித்து ஜூலை எட்டாம் தேதி அன்று புலனத்தில் எனக்கு அனுப்பிய செய்தி பின்வருமாறு என் பிறந்த நாள் அன்று வந்தமைக்கு நன்றி என் அருமை நண்பர் அவ்வையின் சிந்தனைப் புதையலில் ஆழ ஒரு வாய்ப்பு! இந்திரா பார்த்தசாரதி

POST: 2025-08-09T10:29:02+05:30

அரிமா நோக்கு ஜூலை 2025 பக்கம் எண். 5 உள்ளத்தில் உறைந்த ஒளிக்கதிர்கள் முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600008. 24. 04. 2025 அன்று ஒளவை நடராசன் அவர்களின் 90ஆம் பிறந்தாள் நிகழ். சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரில் அமைந்துள்ள, ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில், முனைவர் ஔவை நடராஜன் தலைமையில் கவிக்கோ அப்துல் ரகுமான், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்ட அமரர் கலாமின் புகழ்வணக்கக் கூட்டத்தி ...

POST: 2025-08-08T07:32:11+05:30

மகாகவி காலாண்டிதழ் ஏப்ரல் - ஜூன் 2025 பக்கம் எண். 20 நல்லாரை காண்பதும் நன்றே... ஔவை அருள் வார இறுதி நாளாகிய சனிக்கிழமை மாலை (19.10.24) என் சிந்தையில் எந்நாளும் வீற்றிருக்கும் எம் தந்தையாரின் இனிய நண்பர் பேராசிரியர் எழில் முதல்வன் அவர்களைத் தஞ்சையில் அவர் இல்லத்தில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்பா இயற்கையெய்திய செய்தி அறிந்தவுடன், இரு தனி மடல்களை எனக்கு எழுதித் தேறுதல் கூறிய அப்பெருந்தகை, தன் இல்லத்தின் முதல் மாடியில் தாம் பேணி வரும் அருஞ்செல்வங்களாகிய நூல்களைக் கொண்ட தன் ...

POST: 2025-08-07T08:47:09+05:30

வாழி! வாழி! எந்தையாரின் இனிய நண்பரும் அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய திருவருட்பாவைத் திறம்பட கற்றதனால் வள்ளலார் வழியில் பிறலாது நிற்றலால் வள்ளலார் நேசன் என்ற சிறப்பித்து அழைக்கப்படும் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவில் (1.8.25) வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் முத்தமிழ்ப்பேரவை டி என் இராஜரத்தினம் கலையரங்கத்தில் பெருமளவில் திரண்டிருந்த கூட்டத்தில் பங்கு கொண்டு உரையாற்றி பாராட்டி மகிழ்ந்தேன்.

POST: 2025-08-06T10:12:27+05:30

அம்ம வாழி தோழி புன்னை எனத் தொடங்கும் பெரும்பாக்கனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்றூத் தொண்ணூற்(று) ஆறு செம்மைசேர் தமிழ்க் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஆறு

POST: 2025-08-05T11:04:34+05:30

வியாழக்கிழமை (31.7.25) அன்று மதியம் 2.30 மணி அளவில் கோவை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் அன்பரசி மற்றும் உதவியாளர் திருமதி சுகந்தி இருவரையும் சந்தித்து அலுவல் பதிவேடுகளை பார்வையிட்டும் திட்டப் பணிகளை குறித்தும் ஆய்வு செய்தேன். கோவையில் அமைந்துள்ள சக்தி குழும அலுவலகத்தில் அளவில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கத்திற்குப் பிறகு சக்தி குழுமத்தின் தலைவர் திரு மாணிக்கம் அவர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்து அவர் அருகில் நின்று ஒளிப்படம் எட ...

POST: 2025-08-04T08:12:38+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாய்மையே வெல்லம் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2056 / ஆடி-19 04.08.2025 (திங்கள்கிழமை) நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை இடம் : திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் அரங்கம் (முத்தமிழ்ப் பேரவை மன்றம்), அடையாறு, சென்னை பெருந்தகையீர்! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2056, ஆடித் திங்கள் 19ஆம் நாள் 04.08.2025 (திங்கள்கிழமை) அன்று சென்னை, அடையாறு திருவாவடுதுற ...

POST: 2025-08-03T10:46:15+05:30

தமிழ்நாட்டு மஞ்சள் நகரம் வியாழக்கிழமை (31.7.25) அன்று நண்பகல் 11 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரபுக்கவிஞர் திரு கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து அளவளாவி நூற்பரிசு மற்றும் பயனாடை வழங்கி மகிழ்ந்தேன். அவரும் தன்னுடைய வெளியிடவிற்கும் வெண்பாக்கள் நிறைந்த புதிய 127 பக்கம் கொண்ட பனுவலான அகநக வெண்பா விருந்தினை வழங்கினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகத்தில் ஏழாம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தையும் நடைபெற்று வரும் திட்டங்களைக் குறித்தும் துணை இயக்குநர் திருமதி ஜோதி ம ...

POST: 2025-08-02T11:19:09+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நாள் : திருவள்ளுவராண்டு 2056, விசுவாவசு, ஆடி 13,14 29.07.2025, 30.07.2025 (செவ்வாய்,புதன்) இடம்: மக்கள் குறை தீர் கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர். ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரல் இரண்டாம் நாள் : 30.07.2025 (புதன்) பிற்பகல் 3.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திருமதி ஜ.சபீர்பானு உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மா ...