“உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!”

26.08.2022 தினமணி பக்கம் எண் 8 "உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!" 'கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி, மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்கு தான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி. உன்னுங்கள் உயர்வடையலாம் இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, மேடைத்தமிழுக்கு அழகூட்டிய மேலோர், அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் சமயங் கடந்த சமரச தீபமாய் மறைந்தவர் திரு.வி.க. திரு.வ ...

மொழியும் பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம்

தினமணி - 9 1 2023 பக்கம் எண் : 2 மொழியும் பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந அருள் சென்னை, ஜன.9: மொழியும், பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தெரிவித்தார். சென்னை புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் சார்பில் தமிழகத் தில் 400 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'கவிநானூறு எனும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது : தமிழ் இலக்கியத்தில் புறநானூறு 1893 - இல் தமிழ் ...

ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே!

தினமணி - 14 7 2022 பக்கம் எண் : 5 ஊரன் மற்று யாவருக்கும் ஊதியமே! சன்மார்க்க உலகத்துக்கு இப்படி ஒரு ஞானத்துறவி வாய்ப்பது அரிது . எழுத்து, பேச்சு, எண்ணம், தொண்டு மேலாண்மை என அனைத்து நிலைகளிலும் அவர் மாசற்ற தொண்டராக , அருளாளராக நாடு போற்ற வாழ்ந்தார். நூற்றாண்டைத் தொடுவார் என்று எண்ணித் தமிழுலகம் அவரைப் போற்றி வந்தது. வாழ்வெல்லாம் வடலூருக்கே - மூச்செல்லாம் வள்ளலாருக்கே என்று வாழ்ந்த சமரச ஞானப் பெருஞ்சுடர் அணைந்ததே என்று அன்பர்கள் மனம் ஓலமிடுகிறது. தினமலர் - திருச்சி பதிப்பு பக்கம் எண் : ...

நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !

தினமணி - 1 - 4 - 2022 - நடுப்பக்கம் இரண்டாம் கட்டுரை - பக்கம் எண் 6 நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் ! முனைவர் ந அருள் உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் , உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு நிறுவப்பட்டது. ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோர் நீண்ட காலமாக சந்தாதாரர்களாக இருந்தனர். குழுந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணர்த்தியிருந்தனர். நானும் , என் சகோதரர்களும் இந்த இதழின் கட்டுரைகனை விரும்பிப் படித்தோம். இந்த இதழில ...

ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு !

தினமணி - 28 - 11 - 2021 - ஞாயிறு - கொண்டாட்டம் - இணைப்பிதழ் - .பக்கம் எண் : 2 ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு ! முனைவர் ஔவை அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, . தமிழ் நாடு அரசு ஆப்பிரிக்க மண்ணின் மீதும் கருப்பின மக்கள் மீதும் தீராத அன்பு கொண்ட ஆப்பிரிக்க நாட்டின் எழுத்துத் திலகமான திரு. வில்பர் ஸ்மித் தனது 88-ஆம் அகவையில் இயற்கையெய்திய தகவல் ஆங்கில இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ‘ஜாம்பியா’ என்றழைக்கப்படும் மேற்கு ருடேசியாவில் 09.01.1933 அன்று பிறந்தவர் வில்ப ...

திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும்

தினமணி 2.1.2021 நடுப்பக்கம்-6 திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் ----------------------------------------------------------------------- இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார் .திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் . ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் - திருக்குறளுக்கும் - நாலடியாருக்கும் - புறப்பொருள் வெண்பாமாலையில் 59 பாடல்கள ...

வாசிப்புப் பழக்கமே – வாழ்வை வளமாக்கும் !

தினமணி - 27 - 9 - 2021 - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 வாசிப்புப் பழக்கமே - வாழ்வை வளமாக்கும் ! அண்மைக் காலமாக, நம்மிடையே புதிய நூல்களைத் தேடி வாங்குவதும் ,புதிய நூலை நூலகங்களில் எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன . அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது , நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன . ஆனால், இந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை . மின்னணு ஊடகம் - அச்சு ஊடகத்தின ...

நயம்படு சொல்லறிவார் !

தினமணி - நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 22 2 2021 நயம்படு சொல்லறிவார் ! பேராசிரியர் இரா பி சேதுபிள்ளையும்,இரசிகமாமணி டி கே சி யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள் . நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளர் . நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பர் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தார் . தென்குமரி மாவட்டம், தோவாளை வட்டம், தலைநகர் பூதபாண்டிக்கு அருகிலுள்ள சிறமடம் என்ற சிற்றூரில் நல்லபெருமாள் 1919 ஆம் ஆண்டு திசம்ப ...

மாந்தர் பெற்ற மகத்தான வரம் !

தினமணி - பக்கம் எண் : 6 - நாள் : 21 - 2 - 2022 இன்று ( பிப்ரவரி - 21 ) உலக தாய்மொழி நாள் - குறித்து வெளியிடப்பெற்ற சிறப்புக்கட்டுரை மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! முனைவர் ஒளவை அருள் இயக்குநர் மொழிபெயர்ப்புத்துறை தமிழ்நாடு அரசு தாய்மொழி என்பது உலகில் மாந்தர் மட்டும் பெற்ற மகத்தான வரமாகும். மனித இனத்தில் உணர்தம், புரிதல் என்ற நிலையிலிருந்து அறிதல் என்ற அடுத்த உயர்நிலைக்குப் புலன்கள் பெற்ற உணர்வுகளைத் தரும் உள்ளுணர்ச்சியின் ஊற்றாகும் . எண்ணங்களுக்கும் மனத்தில் ஓட்டத்திற்கும் அடிப ...

நூறாண்டு நிறைந்த – தேசியத் தமிழ் வளர்த்த திலகம் !

தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு ) " தமிழ்மணி " - ( பக்கம் எண் - 6 ) . பகுதியில் வெளியான ஒளவை அருள் எழுதிய தேசியத்திலகம் கு ராஜவேலு குறித்து வெளியான கட்டுரை நூறாண்டு நிறைந்த - தேசியத் தமிழ் வளர்த்த திலகம் ! ஒளவை அருள் அறிஞர் இராஜவேலு நினைத்திருந்தால் தமிழ்நாடு மாநில காங்கிரசுத் தலைவராக அமர்ந்திருக்க முடியும் .கருதியிருந்தால் கல்வியமைச்சராக பொறுப்பேற்பது அவருக்கு அப்போது எளிது .விரும்பியிருந்தால் இந்திய ஆட்சிப்பணிக்கு அவர் எப்போதோ தெரிவு செய்யப்பட்டிருப்பார் . அனைத்தையும் விலக்கி வ ...