நெஞ்சமெலாம் உங்கள் நினைவே! மருத்துவமாமணி திருமதி தாரா நடராசன் ஒளி 15.07.1932 நிழல் 14.08.2020 உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் திருமதி தாரா நடராசன் (14.08.2020) மறைந்து ஐந்தாண்டுகளாகிறது. ஆடித்திங்கள், செவ்வாய்க்கிழமை அன்று 22.07.2025 காலை 7.30-9.00 மணிக்குத் 'தாரகை' இல்லத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வியை ஒளியகம் ந.ஒளியரசு குழுவினர் வாயிலாக நடைபெற உள்ளது. நினைந்துருகும் கண்ணன், அருள், பரதன் குடும்பத்தினர்
POST: 2025-07-21T11:22:16+05:30
விருந்தினர் போற்றுதும்! கடந்த வெள்ளிக்கிழமையன்று (18.07.2025) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களை மொரிஷியஸ் நாட்டின் இளைஞர் (ம) விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.தர்மராஜன் நாகலிங்கம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜராமன், இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
POST: 2025-07-20T09:05:36+05:30
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் (பதிவு பெற்றது) நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு! நாள் : 20.07.2025, ஞாயிறு, காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரை இடம்: கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி கலையரங்கம் (ரவுண்டானா அருகில்), அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102. தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை அரிமா திரு. துரை சுந்தரராஜுலு செயலாளர் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் தலைமை தமிழ்ப்பணிச்செம்மல் புலவர் திரு. த. இராமலிங்கனார் தலைவர், அண ...
POST: 2025-07-19T09:35:16+05:30
முழுமைசேர் ஒளி வெள்ளம்! தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு ஜூலை 18 வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தின் கண்கவர் ஒளி வண்ணப்படக்காட்சி நம் கண்களுக்கு விருந்தாக விரிவதைக் கண்டு தமிழ்நாடு வாழ்க என்று வாழ்த்தி மகிழ்வோம்.
POST: 2025-07-18T07:52:49+05:30
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு நாள் ஜுலை-18 அழைப்பிதழ் நாள் : 18.07.2025 (வெள்ளிக்கிழமை) நேரம் : 10.15 மு.ப. இடம்: திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், அடையாறு (முத்தமிழ்ப்பேரவை மன்றம்) மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்ய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது 1967ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நாளினை "தமிழ்நாடு நாள்" என மாண்புமிகு தமிழ்நாடு ...
POST: 2025-07-17T06:54:12+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற இணைச்செயலாளர் புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி அவர்களின் 87-வது பிறந்த நாள் இடம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் நாள் : 15-07-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமை : முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு வாழ்த்துரை : முனைவர் மா.கி.இரமணன் நிறுவனர், திருவொற்றியூர் பாரதி ...
POST: 2025-07-16T06:58:58+05:30
நிறப்புடைக்(கு) ஒல்கா யானை மேலோன் எனத் தொடங்கும் நொச்சி நியமங்கிழாரின் புறப்பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) மூன்று சிறப்புடைய தமிழாய்ந்த கருத்துகளை மாரிமழைபோல் வாரி வழங்கும் உலகத் தமிழிதழ் இரு நூற்றுத் தொண்ணூற்(று) மூன்று
POST: 2025-07-15T09:56:41+05:30
செய்தி வெளியீடு எண்: 1601 நாள் : 14.07.2025 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச்செய்தல் 15.07.2025 செவ்வாய்க்கிழமை தனிப்பெரும் தமிழ் மாமலை -மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம ...
POST: 2025-07-14T06:54:47+05:30
ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் துறையாய்வுக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் 11.7.25 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
POST: 2025-07-13T09:48:24+05:30
தமிழுக்குப் பெருந்தொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (11.7.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் த ...
