இல்லறம் என்ற நல்லறம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மகேசன் காசிராஜன் இ ஆ ப அவர்களின் செல்வமகள் மருத்துவர் பாலிகா பொறிஞர் சுனை குமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்விற்கு சனிக்கிழமை 18 5 2024 அமைந்தகரையிலுள்ள அய்யாவு திருமணக்கூடத்துக்கு சென்று வாழ்த்தினேன். இவ்விழாவில் அலுவல் பெருமக்களையும் சந்தித்து மகிழ்ந்தேன். வாழிய மனையறம் வாழிய வாழிய
POST: 2024-05-20T10:22:01+05:30
நினைவை மீட்டும் அப்பாவின் ஒளிப்பட காட்சியகம்
POST: 2024-05-19T10:55:07+05:30
கடை சிலம்பு ஏந்தல் முழு நிலவு நாளான 23.04.2024 செவ்வாய்க்கிழமையன்று கண்ணகி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது என் அருகில் இருந்த நண்பரிடம் இவர்களுடைய மரபினர் என்று சொல்லிக்கொண்டு யாரும் வர இயலாது என்று தெரிவித்தேன். அதற்கு அந்த நண்பர் வேறு ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடைய தலைமுறையாம் இவர். அவர் கண்ணகி மதுரையில் வாழ்ந்த இல்லத்தினுடைய சான்றுகளையும் ஒளிப்படத்தையும் உடனே எடுத்துக் காட்டினார். திகைத்தேன். தமிழ்க் கவிஞர் நாள் விழாவுக்காக ...
POST: 2024-05-18T11:12:21+05:30
செருமனியில் செந்தமிழ் மணக்கும் நூலகம் புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்தம் குழுந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அடிப்படைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி வரலாறு குறித்த நூல்கள் அளித்து தமிழ்மொழியை மறக்காமல் அவரது தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் செருமனியிலுள்ள முன்சென் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ் நூல்கள் மற்றும் நிலைப்பேழைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 அன்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவ ...
POST: 2024-05-18T11:12:21+05:30
செருமனியில் செந்தமிழ் மணக்கும் நூலகம் புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்தம் குழுந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அடிப்படைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி வரலாறு குறித்த நூல்கள் அளித்து தமிழ்மொழியை மறக்காமல் அவரது தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் செருமனியிலுள்ள முன்சென் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ் நூல்கள் மற்றும் நிலைப்பேழைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 அன்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவ ...
POST: 2024-05-17T09:59:21+05:30
நெகிழ்வான சந்திப்பு எங்கள் நெருங்கிய உறவினர் ஆனந்தன் மாமா அவர்களின் மூத்த மகள் தங்கமணியின் திருமணம் 13.11.1978 ஆம் ஆண்டில் இரத்தனகிரி திருக்கோயிலில் நடைபெற்றது. அப்பொழுது பெற்றோர்களுடன் சென்று வந்த (மணமகள் மற்றும் நாங்கள் அம்மா ஒட்டி வந்த சீருந்து) மங்கல நிகழ்விற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் அமையப்பெற்றுள்ள இரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளை 2.3.24 சனிக்கிழமையன்று நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சித் த ...
POST: 2024-05-16T12:16:01+05:30
கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி சிவலிங்கம் பூங்காவினை 6.3.24 புதன்கிழமையன்று சென்று பார்த்தேன்..
POST: 2024-05-15T09:34:23+05:30
"உரைப்பார் உரைப்பவை எல்லாம்" எனத் தொடங்கும் குறட்பா இரு நூற்று முப்பத்திரண்டு; இரப்பார்க்(கு) ஒன்று ஈத்துவக்க எழுச்சி மிக்க படைப்புகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்திரண்டு.
POST: 2024-05-14T07:14:14+05:30
நெஞ்சையள்ளும் தஞ்சைப்பயணம் அலுவலால் தஞ்சையிலுள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அலுவல் பெருமக்களுடன் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் உடன் கட்டடப் பணியின் ஆய்வுக்கூட்டத்தில் வியாழக்கிழமை (4.4.24) கலந்து கொண்டு பார்வையிட்டேன்.
POST: 2024-05-13T10:12:39+05:30
அப்பா -நீடு புகழ் நிலை வெளிச்சம் தந்தையின் 89 ஆம் பிறந்த நாள் முன்னிட்டு (24.4.24) புதன்கிழமையன்று சென்னையின் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் வணக்கத்தையும் அன்னம் படைத்தும் பெருந்தகையின் நினைவு போற்றி உளம் உருகி வணங்கினேன்...
