POST: 2024-05-13T10:12:39+05:30

அப்பா -நீடு புகழ் நிலை வெளிச்சம் தந்தையின் 89 ஆம் பிறந்த நாள் முன்னிட்டு (24.4.24) புதன்கிழமையன்று சென்னையின் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள நினைவிடத்திற்கு சென்று மலர் வணக்கத்தையும் அன்னம் படைத்தும் பெருந்தகையின் நினைவு போற்றி உளம் உருகி வணங்கினேன்...

POST: 2024-05-12T09:33:39+05:30

அன்னையர் தினம் உள்ளார் தாரா அம்மா என்றும் உள்ளத்தில்! எங்கள் தாயே! எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா! அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும் எங ...

POST: 2024-05-11T07:38:53+05:30

ஒளிக்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திங்கட்கிழமை (29.4.24) புறவாயிலிலும் அறையிலும் ...

POST: 2024-05-10T10:38:10+05:30

உவப்பத்தலைக்கூடி.... மதுரையிலுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தெற்கு மாவட்டத்தின் தலைமை நிருவாகி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் மொழிபெயர்ப்பு உலகின் தனிப்பெரும் ஆவணப்புதையலாகவும் நூலகத் துறையில் நுண்ணிய களஞ்சியமாகத் திகழும் முனைவர் முருகேசபாண்டியன் அவர்களை செவ்வாய்க்கிழமை(30.4.24) சந்தித்து நீண்ட நேரம் மொழியாக்கத்தின் பல்வேறு நுண்மைக் கருத்துக்களை அளவளாவி மகிழ்ந்தோம். நீண்ட உரையாடலின் நிறைவில் அனைத்தும் மொழிபெயர்பின்றி அணுவும் அசையாது என்ற முதுமொழியின் உண்மை நிலையினை அறிந்து த ...

POST: 2024-05-09T06:22:03+05:30

இருங்குன்றத்தில் இருந்தேன்! என் பாட்டனார் உரைவேந்தர் பல பாடல்களை மனப்பாடமாக விடியற்காலையில் சொல்லும் பொழுது அப்பா இளமையில் கேட்ட பாடல் வரி: குல மலை கோல மலை குளிர் மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலைமதே! நாடு போற்றும் தமிழாசிரியர் சந்திரன் நண்பர் கஜேந்திர பாபு பொன்னேரி பிரதாப் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை (30.4.24) ஆண்டுகள் பல கழித்து மதுரையிலுள்ள கள்ளழகர் திருக்கோயிலுக்குச் சென்று வந்த பொழுது அப்பா சொன்ன தல வழிபாட்டுப் பாடலை நினைந்தேன்..

POST: 2024-05-08T08:00:49+05:30

ஈதல் இசைபட வாழ்தல் எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்று முப்பத்தொன்று; காதல் மீதூர்ந்து தமிழியற் கட்டுரைகளைப் பரிசாக வழங்கிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்தொன்று.

POST: 2024-05-07T08:34:07+05:30

தமிழ் வளர்ச்சித் துறை https://www.youtube.com/live/JCcf_GfI3yg?si=pxglJHYgLf1Us6xo ஒப்பியல் அறிஞர் கால்டுவெல்லின் 210ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி - 07.05.2024 செய்திக் குறிப்பு திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் 07.05.1816இல் பிறந்து, ஸ்காத்லாந்தில் கல்விப் பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சிபெற்றுத் தமிழ்நாட்டில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். மொழி ஆராய்ச்சியில், வரலாற்று ...

POST: 2024-05-06T10:27:22+05:30

ஒளிப்பட உலா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆம் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழ்க்கவிஞர் திருநாள் என்ற மாபெரும் விழா (29.4.24) உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் மதுரையில் நடைபெற்றது. காலை தொடக்க விழா நிகழ்ச்சியில் நோக்கவுரை ஆற்றிய பொழுது அணி செய்த ஒளிப்படக்காட்சி...

POST: 2024-05-05T10:47:04+05:30

சங்ககாலப்புலவர் பெருமக்களை மலர் மாலையால் போற்றுதும்! தரணி புகழ் சங்கப்புலவர்களின் பரணி பாடும் தமிழ் வளர்ச்சித்துறையின் செம்மாந்த பணி பாவேந்தரின் 133 ஆம் பிறந்த நாள்(29.4.2024) முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழ்க்கவிஞர் திருநாள் என கொண்டாடப்படுகின்றது. பாவேந்தரின் ஒளிப்படத்திற்கு மலர் வணக்கம் செய்வதோடு தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நிறுவப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைக்கழி நாட்டிலுள்ள சங்ககாலப் புலவர் நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணுக்கும் மக ...

POST: 2024-05-04T10:04:19+05:30

சில்லென்ற ஒரு சந்திப்பு! கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று "நீர்வழிப் படூஉம் புணைபோல ", "ஆருயிர்" முறைவழிப் படூஉம்’ தொடர்ந்து மேடைகளில் உவப்பாக சொல்லும் புறப்பாட்டு வரிகளாகும் . 25.4.24 வியாழக்கிழமை அன்று தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் "நீர்வழிப் படூஉம் என்ற அருமையான தலைப்பிலான புதினத்தின் ஆசிரியர், கொங்குச்செம்மல், சுதேசமித்திரன், எதிரொலி, காலச்சுவடு இதழ்களில் தொடர்ந்து எழுதிய இதழாழர், அரசுப் பள்ளியில் பணியாற்றியவருமான எழுத்தாளர் தேவி பாரதியையும் அவரின் இனிய நண்பர் பாலு ...