நூல் வாயில் மதுரையில் நடைபெற்ற தமிழ்க் கவிஞர் திருநாள் அன்று (29.4.24) நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (என் சி பி எச்) தாங்களாகவே முன்வந்து உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் பாவேந்தர் நூல்களை அணி செய்து அரங்கம் அமைத்தது தனிச்சிறப்பாக அமைந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாவேந்தரின் அனைத்து நூல்களைக் கண்டுப் பாராட்டினார். வருகை புரிந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் நாள் முழுவதும் பாவேந்தரின் நூல்களை வாங்கிச்சென்றனர் என்று பெருமிதமாக புத்தக நிறுவனத்தினர் சொன்ன பொழுது நூலைப்ப ...
POST: 2024-05-02T09:41:56+05:30
நேற்றைய மாலை நிகழ்வு இலக்கிய மன்றம் ஈஸ்வரன் நகர், பம்மல் தொடக்கம் (14.04.1979) தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர் இலக்கிய மன்ற 46ஆம் ஆண்டு விழா மற்றும் உழைப்பாளர் தினவிழா அழைப்பிதழ் அன்புடையீர், வணக்கம், நமது இலக்கிய மன்றத்தின் 46ஆம் ஆண்டு விழா மற்றும் உழைப்பாளர் தினவிழா நிகழும் திருவள்ளுவராண்டு 2055 சித்திரை திங்கள் 18ஆம் நாள் (01.05.2024) புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது. தாங்கள் இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்ப ...
POST: 2024-05-01T10:51:36+05:30
சாதலின் இன்னாதது இல்லை எனத் தொடங்கும் திருக்குறட்பா இருநூற்று முப்பது; வாழ்தலின் மிகுதியான தமிழ்நுட்பக் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பது.
மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!
தினமணி சென்னை பக்கம் 6 திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024 மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகையைச் சேர்ந்தவர். பாரதியார் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவர் பாரதிதாசன். தனது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால் ...
POST: 2024-04-30T07:54:18+05:30
தினமணி சென்னை பக்கம் 6 திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024 மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்! உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகையைச் சேர்ந்தவர். பாரதியார் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவர் பாரதிதாசன். தனது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால் ...
POST: 2024-04-29T08:43:15+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்க் கவிஞர் நாள் 2024-2025 பாவேந்தர் பாரதிதாசன் 133ஆம் பிறந்தநாள் அழைப்பிதழ் 29.04.2024 திங்கள் கிழமை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை. தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். செந்தமிழ் மணக்கும் பெரும் பெயர் மதுரையில் சித்தம் இனிக்கும் பாவேந்தரின் பிறந்த நாள் பெருமங்கலம் காணும் திருவிழா! தமிழ்க் கவிஞர்கள் திருநாள் என்று தமிழ்நாட்டரசு உச்சிமேல் வைத்து மெச்சிப் பாராட்டும் தன்மானத் தமிழ்விழா! நாவலரும் பாவலரும் நயந்தேத்து ...
POST: 2024-04-28T06:32:46+05:30
கடமை -கனிவு- காப்பு கடந்த பத்தாண்டுகளாக காந்தி ஔவை இல்லத்தின் வாயில் காவலர், தூய்மைப்பணியில் விழிப்பானவர் பாடிக்கொண்டே பணியாற்றும் அரும் பணியாளர் பெற்றோர்கள் இருவரும் அன்பொழுக காந்தி... காந்தி ....என்று அழைத்தப் போதெல்லாம் வண்ணமுற காத்து வாய் முணுமுணுக்காமல் சொன்னபடி கேட்பவர். தீநுண்மிக் காலத்திலும் தவறாது பணிக்கு வந்த உண்மையாளர். எந்தையாரின் செவிலியர்கள் அனைவரும் இவரை அப்பா என்று அன்புடன் அழைக்கும் வாய்ப்புப் பெற்றவரின் மகன் இரவிசங்கரின் திருமணத்திற்கு மருத்துவர் பத்மானந ...
POST: 2024-04-27T10:53:10+05:30
பிறந்த நாள் புகழ் வணக்கம் 24.04.1936 தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஒளவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினைவில் கண்ணன் அருள் பரதன். 24.4.24
POST: 2024-04-26T08:29:47+05:30
வி ஜி பி எனதன்பு நண்பர், நடராசரே! எனதன்பு நண்பர், நடராசரே! திருவள்ளுவர் தம்மை நீர் உரையில் வைத்தீர், கடல் கடந்தும் தமிழ்மணம் கமழச் செய்தீர்! நாடறிந்த பட்டிமன்றத் தலைவரே! நூற்றுக்கணக்கான இலக்கிய வாணர்களின் பயிற்சிப்பட்டறையே! விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நுமைக் கவர்ந்து நின்றது யான் பெற்ற பேறு! இன்றைய நும் பிறந்த நாளில் நிலைபெறுக நிலனுள்ளவரை நும் புகழ் என வாழ்த்துகின்றேன், விண்ணுலகப் பூவே! டாக்டர் வி.ஜி.சந்தோசம்
POST: 2024-04-25T09:01:07+05:30
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.04.2024 செய்திக்குறிப்பு இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ - கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட "குடக்கோச்சேரல் இளங்கோ" என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ் அன்னைக்கு நூற்சிலம்பு அணிவித்த பெருமை ...
