POST: 2025-12-10T10:24:49+05:30

Arul.2009/FB/#6810 நில்லாது சீவன் நிலையன்று என எண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் " எனத் திருமூலர் குறிக்கும் திருமந்திரப் பாடல் எண் முந்நூற்றுப் பதினான்கு ! " சொல்லான அமுதம் சுவைநன்று என வல்லார் வகுத்த வளர்தமிழில் ஆயிற்றே " அறிவன் தோறும் ஊறும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்றுப் பதினான்கு !

POST: 2025-12-09T10:00:43+05:30

Arul.2009/FB/#6809 பழகிக்கழித்த பள்ளித்தோழர்களுடன்! சென்னைக் கிறித்துவ ஆண்கள் மேனிலைப் பள்ளியில் (சேத்துப்பட்டு) ஆறாம் வகுப்பு 1978 ஆம் ஆண்டு (டி பிரிவு) முதல் பன்னிரண்டாம் வகுப்பு (எம் 3)1985 ஆம் ஆண்டு வரை பயின்றவர்களில் குறிப்பிட்ட 31 மாணவச் செல்வங்கள் நாற்பதாண்டுகள் கழித்து மாமல்லையில் உள்ள மருதம் விருந்தினர் விடுதியில் 23.11.25 ஞாயிற்றுக்கிழமை அன்று பெருமகிழ்ச்சியோடு சந்தித்து மகிழ்ந்தோம். அமெரிக்கா,(கரியப்பா) துபாய்,(பிரபாகர் டேவிட்) சிங்கப்பூர்,(பைஜு) மலேசியா, (ஓ சுரேஷ் கும ...

POST: 2025-12-08T10:44:39+05:30

Arul.2009/FB/#6808 அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு நெறியாள்கை குழுவின் எட்டாவது கூட்டம் 11,12 நவம்பர் திங்களில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சென்னை எழுமூர்த் தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடைபெற்றது தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் அவர்களின் தலைமையில் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பங்களித்தோர் விவரம் 1.புலவர் செந்தலை கவுதமன் 2. முனைவர் வீ. அரசு 3.முனைவர் மு. வளர்மதி 4.திரு அ. மதிவாணன் 5.திரு.ப. சிவக்குமார் பேரா. அரசு அவர்கள், அண்ணல் அம்பேத்கரின் மராத்தி மொழியில் ...

POST: 2025-12-07T10:49:59+05:30

Arul.2009/FB/#6807 நற்றமிழ் மறவர்களைப் போற்றுவோம்! மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்குக் காரணமாய் அமைந்து ஒளிவிளக்குகளாய்ச் சுடர் வீசிய தியாகச் செம்மல்கள் தாளமுத்து - நடராசன்! சென்னை எழுமூரில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகத்தின் முகப்பில் தாளமுத்து நடராசன் மாளிகையில், மொழிப்போர் ஈகியர் இருவருக்கும் மார்பளவுச் சிலைகள் நிறுவப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.1.25 அன்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக, 17.02.2025 திங்கட ...

POST: 2025-12-06T10:54:25+05:30

Arul.2009/FB/#6806 ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே! 5.12.25 வெள்ளிக்கிழமையன்று சென்னையில் காலை 10:30 மணியளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்திலும் மாலை 3 மணியளவில் எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகத்திலும் ஆட்சி மொழி ஆய்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு தலைமை தாங்கி நுண்ணாய்ந்த ஆய்வறிக்கைகளை முறையே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் திரு பா பொன்னையா இ ஆ ப அவர்களிடமும் எழுது பொருள் அச்சுத்துறை பணி மேலாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களிடமும் வழங்கி ...

POST: 2025-12-05T09:37:05+05:30

Arul.2009/FB/#6805 தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை செங்கல்பட்டு மாவட்டம் 2025 2026 திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை-19 04.12.2025 இடம்: சென்னை கிறித்துவக் கல்லூரி, (தாம்பரம்) பெருந்தகையீர் வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உயர வாழ் ...

POST: 2025-12-04T08:16:57+05:30

Arul.2009/FB/#6804 https://www.youtube.com/live/ajsB9fR2VXQ?si=KFtUfyX9Y3waCWha Singaram Pillai Girls' Hr. Sec. School Management, Headmistress, Staff & Students Cordially invite you for our CENTENNIAL ANNUAL DAY on the 29th of November, 2025 in our school SARASWATI ARANGAM, at 4.00 p.m. CHIEF GUEST DR. AVVAI ARUL MA, MPHIL, PH.D DIRECTOR, TAMIL DEVELOPMENT DEPARTMENT, GOVERNMENT OF TAMILNADU GUESTS OF HONOUR S. SENTHILKUMAR FORMER CRO, BANK OF NEW YORK DR. NIRMALA SENTHILKUMAR OBGYN ...

POST: 2025-12-03T09:37:31+05:30

Arul.2009/FB/#6803 "செய்யாமல் செற்றார்க்கும் என்று இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் தொடங்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பதின்மூன்று பொய்யாமல் அறிவன் கிழமை தோறும் உரியவர்களுக்குச் சென்று சேரும் உலகத்தமிழ் இதழ் முந்நூற்றுப் பதின்மூன்று"

POST: 2025-12-02T07:04:47+05:30

Arul.2009/FB/#6802 எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 93 ஆம் பிறந்த நாள் (2.12.2025) பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக் காப்பவர் தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல் இனமான எழுச்சி உரைகளையும், நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி இருண்டு கிடக்கும் திராவிட சமுதாயத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர் ஆசிரிய ...

POST: 2025-12-01T08:04:35+05:30

Arul.2009/FB/#6801 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 79ஆம் அணி நாள்: திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை 15 2025 திசம்பர் 01 (திங்கட்கிழமை) இடம்: ஆதி திராவிட நல ஆணையரகக் கூட்டரங்கம். எழிலகம் இணைப்பு, முதல் தளம், சென்னை-600 005 பயிற்சி நிரல் முற்பகல் :10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம். சென்னை-600 008 தொடக்கவுரை முனைவர் ந. அருள் தமிழ் வ ...