POST: 2025-10-13T06:01:29+05:30

Arul.2009/FB/#6750 https://www.youtube.com/live/MBisa0isGsQ?si=muhEqP6fk5V41Jv8 தமிழ் வளர்ச்சித் துறை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் தீராக்காதல் திருக்குறள் - நாட்டிய நாடகம் கணித்தமிழ்ப் பன்னாட்டுக் கருத்தரங்கம் - கணித்தமிழ் உலகளாவிய நோக்கும் போக்கும் நாள்: 13.10.2025 திங்கட்கிழமை நேரம் : காலை 10.30 மணி இடம்: இராமானந்தா அடிகளார் அரங்கம் நிகழ்ச்சி நிரல் நேரம் - நிகழ்வுகள் காலை 10.30 தமிழ்த்தாய் வாழ்த்து காலை 10.32 நோக்கவுரை & வரவேற்புரை: ...

POST: 2025-10-12T10:59:42+05:30

Arul.2009/FB/#6749 ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 3.7.25 வியாழக்கிழமையன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள துணி நூல் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை துணி நூல் இயக்குநர் திருமதி இரா.லலிதா இ.ஆ.ப அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். நிகழ்வில் இணை இயக்குநர், துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி சாந்தி மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

POST: 2025-10-11T09:28:37+05:30

Arul.2009/FB/#6748 தொட்டவை துலங்கவும் - தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு அலைமகள், கலைமகள், திருமகள் திருநாளை முன்னிட்டு 30.9.25 செவ்வாய்க்கிழமையன்று தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், தட்டச்சர்கள், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்கள் புடை சூழ சிறப்பு வழிப்பாட்டில் கலந்துகொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தேன்.

POST: 2025-10-10T10:54:16+05:30

Arul.2009/FB/#6747 ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 6.10.2025 திங்கட்கிழமையன்று சென்னையிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினைகூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு க நந்தகுமார் இ ஆ ப அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். நிகழ்வில் கூடுதல் பதிவாளர்கள் திரு மு பழனிவேலு, திருமதி வீ தேவகி, நேர்முக உதவியாளர் திரு ச நீலகண்டன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக் ...

POST: 2025-10-09T07:44:07+05:30

Arul.2009/FB/#6746 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! வாயமையே வெல்லும் தமிழ் வளர்ச்சித் துறை திருவாரூர் மாவட்டம் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் 2025-2026 அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2056 புரட்டாசி - 23 09-10-2025 வியாழக்கிழமை நாள் : காலை 10.00 மணி இடம்: குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாரூர் பேரன்புடையீர் வணக்கம், திருவாரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், பேராசிரியர்கள்/ஆசிரியர்கள், மாணவ/மாண ...

POST: 2025-10-08T10:48:37+05:30

Arul.2009/FB/#6745 வயலைக் கொடியின் வாடிய மருங்கின்... எனத் தொடங்கும் மதுரை வேளாசானின் புறநானூற்றுப் பாடலெண் முந்நூற்று ஐந்து; செயலைச் செம்மாந்த வடிவில் செந்தமிழில் வந்து வழங்கும் உலகத்தமிழிதழ் முந்நூற்று ஐந்து

POST: 2025-10-07T09:02:48+05:30

Arul.2009/FB/#6744 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி 21, 22, 23 07.10.2025, 08.10.2025, 09.10.2025 இடம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், விழுப்புரம் மாவட்டம் பெருந்தகையீர்! வணக்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்ந்தவர்கள் நாம். தமிழ் வளர்ச்சித் துறை ...

POST: 2025-10-06T10:51:47+05:30

Arul.2009/FB/#6743: செய்தி வெளியீடு எண்: 2317 நாள் : 29.09.2025 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள் தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. உதவித்தொகை முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.50 ...

POST: 2025-10-05T11:33:14+05:30

என்றும் பதினாறு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு முகநூலில் கணக்குத் தொடங்கி கருத்துப் பதிவுகளை பன்னோக்குத் தலைப்புகளில் எழுதத் தொடங்கினேன். பல நிலைகளில் என் அருமை தந்தையாரும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தினார். அவ்வகையில் தந்தையார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அடியேன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், உரைவேந்தரின் கட்டுரைக்கரும்புகள், அழைப்பிதழ்கள், அலுவலால் நடைபெறும் நிகழ்வுகள்,குடும்ப மங்கல நிகழ்வுகளோடு ஆழ்ந்த இரங்கல் குறிப்புகள், வெளிநாட்டுப் பயணங்கள், ஒளிப்படங ...

POST: 2025-10-04T10:59:02+05:30

உலக காபி தினம் – அக்டோபர் 1 ============================== சூடாக இருப்பதே சுவை ********************************* என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒரு நாளைக்கு நான்கு காபி அருந்துவது என்பது தங்கள் வாழ்வோடு கலந்து விட்டது என்று அடிக்கடி எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார்கள் . அப்பா சொல்வார் சூடாக அருந்தும் காபியை கணக்குப் போட்டால் ஒரு இலட்சத்தை மிஞ்சும் ஆனால் இதுவரை ஒரு காபி என்று சொல்ல முடிகிறது என்று சொல்ல முடிகிறதே தவிர ஒரே காபி என்கிற தரத்தைக் காண முடியவில்லை தான் அயல் நாடுகள் சென்றபோது நியூசிலா ...