Arul.2009/FB/#6770 தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்கள் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றமைக்கான தகுதிச் சான்றுகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் (30.10.2025 வியாழக்கிழமை) வழங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை ...
POST: 2025-10-30T10:36:27+05:30
Arul.2009/FB/#6769 மாணவக் கண்மணிகளின் மொழி, முயற்சி, மாட்சியின் விழா! தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமையன்று (28.10.2025) நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பேச்சுப் போட்டியில் 35 பேர், கட்டுரைப் போட்டியில் 32 பேர், கவிதைப் போட்டியில் 33 பேர் என மொத்தம் 100 பேர் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் பேச்சுப் போட்டியில் ...
POST: 2025-10-29T07:42:30+05:30
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று , என உரைக்கும் திருக்குறள் எண் முந்நூற்(று) எட்டு இணரூழ்த்து நாறும் மலரொத்த உலகத்தமிழிதழ் முந்நூற்(று) எட்டு.
POST: 2025-10-28T10:05:04+05:30
Arul.2009/FB/#6767 உலகுக்குத் தந்து பெரும்புகழ் கொண்ட சிற்றூருக்குச் சென்று வந்தேன் காவிரி போல் கருநாடக மாநிலத்தில் தோன்றித் தென்பெண்ணை என்னும் பேராறு, கெடிலம் என்னும் சிற்றாறுடன் சேர்ந்து வாழ்விக்கும் வரலாற்றுப் புகழ் மிகுந்தது விழுப்புரம் மாவட்டம். காடவச் சிற்றரசனாகிய கோப்பெருஞ்சிங்கன், பிற்காலச் சோழர்களின் வழித்தோன்றலான மூன்றாம் இராசராசனைச் சிறை செய்த வரலாற்றுக்கு உரிய மாவட்டம் அது. கெடில நாகரிகம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. அங்குத் தமிழ்க் கடவுளாம் முருகனின் புகழ் பரப்பும் மயிலம் வ ...
POST: 2025-10-27T12:11:29+05:30
Arul.2009/FB/#6766 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) தமிழ் முழக்கம் சொல்வது தெளிந்து சொல் மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டுப் பயிலரங்கம் (22.10.25-27.10.25) நிறைவு விழா 27 | 10 | 2025 | காலை 11 மணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி நிறைவுப் பேருரை முனைவர் பழனிவேல் தியாகராஜன் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தொடக்கவுரை திரு. கே.ஜே. பிரவீன்குமார் இ.ஆ.ப.. மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்டம் வாழ்த்துரை முனைவர் ஒ ...
POST: 2025-10-26T11:29:19+05:30
Arul.2009/FB/#6764 கலைமகள் தீபாவளி மலர் 2025 21.10.25 பக்கம் எண்: 99,100,101,102 காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் - கலீல் ஜிப்ரான் முனைவர் ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை ஒரு படைப்பாளியின் சிறப்பு எதனைப் பொறுத்து இருக்கிறது? மண் தோன்றிய காலம் தொட்டு எழுப்பப்பட்டு வரும் கேள்வி இது. அவனது படைப்புகள் அந்தந்தக் காலத்தில் மக்களின் மனத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை எழுப்பி இலக்கிய உலகில் ஒரு நிலையான இடத்தைப் பெறுகின்றன. ஆண்டாண்டுக்காலமாக மக்கள் ...
POST: 2025-10-25T20:03:11+05:30
Arul.2009/FB/#6763 26.9.25 சென்னை திருக்குறள் திட்டப்பணி கவனக நிகழ்ச்சியில் வரவேற்புரை பதிவு
POST: 2025-10-25T10:35:30+05:30
Arul.2009/FB/#6762 ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 78 ஆவது அணி 7.5.2025. புதன் கிழமையன்று சென்னையிலுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி குலதாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் துணை இயக்குநர் திரு து. விக்னேஷ்வரன் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். நிகழ்வில் ஆணையரின் நேர்முக உத ...
POST: 2025-10-24T06:26:47+05:30
Arul.2009/FB/#6761 தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் திருக்குறள் திருப்பணித் திட்டம் பயிலரங்கம்-3 நாள் : 23.10.2025 (வியாழக் கிழமை) திருவள்ளுவராண்டு 2056 / ஐப்பசி -6 நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை முனைவர் ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை தலைமையுரை திருமதி கே.கற்பகம், இ.ஆ.ப, இணை ஆணையர் (கல்வி), பெருநகரச் சென்னை மாநகராட்சி வாழ்த்துரை கவிஞர், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி கருத் ...
