Arul.2009/FB/#6760 இம்மைப் பிறப்பிலும் இருக்கிறது அம்மை வாழும் அம்மையப்பன் "விரிந்த வானே வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணும் செந்தீ யாவும் தந்தோய் தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச் செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம் புதுமை! புதுமை! புதுமை!" பாவேந்தரின் பாடல் வரிகளை உச்சரித்த அத்தகு தன்மையில் 9.10.25 வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில் கலைஞர் கோட்டத்திலிருந்து குடந்தை செல்லுங்கால் தமிழ் வளர்ச்சித் துறையில் என்னுடன் பணியா ...
POST: 2025-10-22T10:59:13+05:30
Arul.2009/FB/#6759 வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் எனக் கடம்பனூர்ச் சாண்டிலியனார் குறிக்கும் குறுந்தொகைப் பாடலெண் முந்நூற்(று) ஏழு; களையுடை முகமாகிப் பலர் வியப்படையக் களிகொள வருமிந்த உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஏழு!
POST: 2025-10-21T12:06:48+05:30
Arul.2009/FB/#6758 திருக்குவளையூர் என்றும் தீந்தமிழ் பேசும்! 9.10.25 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஓய்வறியாச் சூரியன், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகத் திகழ்ந்த பெருந்தகை, மாபெரும் கவிஞர், தலை சிறந்த பேச்சாளர், திரைப்படங்களில் வசனங்களால் தனி முத்திரை பதித்தவர், தன்னலம் இல்லாதவர், தமிழ் நலம் போற்றியவர், கொள்கை உரம் பெற்றவர், பகுத்தறிவுப் படைக்கலன்கள் உருவாக்கிப் பாசறை அமைத்தவர், இலக்கியச் சாரல், இன்தமிழ்த்தேறல் முத்தமிழறிஞர் டாக்டர் ...
POST: 2025-10-20T09:48:13+05:30
Arul.2009/FB/#6757 தந்தையின் ஏக்கம்! தீப ஒளி திருநாளைக் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டாலும் தந்தை மகனுக்கு எழுதிய மடல் ஆண்டாண்டுக் கணக்காக ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் தீபாவளியை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதை அறிந்து கொள்ளலாம். 85 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் போற்றும் உத்தமப் பெரியாரும் தமிழன்னையின் அருந்தவப்புதல்வராய் திகழ்ந்த நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் (4.4.1884-28.3.1944) தன் மகன் நடராஜனுக்கு 12.10.1940 கடிதத்தில் தீபாவளிக்கு உங்கட்கு எத்தனை நாள் லீவு உண்டு? நீங்கள் இங ...
POST: 2025-10-19T11:10:29+05:30
Arul.2009/FB/#6756 வணிகப்பெருமை! தமிழர்களின் கடமை!! உலகத் தமிழர் பொருளாதார மன்றத் தலைவரும் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் அவர்கள் அண்மையில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் பன்னிரண்டாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டினை எழுச்சியுடன் மாபெரும் அளவில் நடத்தித் தமிழகத்தில் கல்வி பயின்று பல்லாண்டுகளாக அமெரிக்காவில் தொழிலதிபர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் வளர்ந்துள்ள அமெரிக்கத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வணிக நிலையில் உயர்ந்து ஓங்கியிருக ...
POST: 2025-10-18T11:35:30+05:30
Arul.2009/FB/#6755 எங்கும் திருக்குறள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ...
POST: 2025-10-17T10:25:13+05:30
Arul.2009/FB/#6754 என்னுடைய பிறந்த நாளன்று 16.10.25 வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், அலுவலகப் பெருமக்களுக்கும், இனிய உறவுச் செல்வங்களுக்கும் பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்- நன்றி, நன்றி, நன்றி தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் என்னை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியில் வாழ்த்தினார்கள்.
POST: 2025-10-16T09:29:04+05:30
Arul.2009/FB/#6753 நீடு புகழும் நெடிய வாழ்வும் தலைமுறைகள் போற்றும் பண்பாட்டுத் தூதர் - திருமதி சிவசங்கரிக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவோம்! தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள், மலர்மணம் வீசும் மங்கல விழா எழுச்சியாக 14.10.25 செவ்வாய்க்கிழமையன்று சவேரா மும்மீன் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பொன்னாடை அணிவித்து எழிலேடு வழங்கி வணங்கினேன். காலஞ்சென்ற திருமதி சாவித்திரி இராகவேந்திரா அம்மையார் அவர்களின் நல்லூக்கத்தால், திருமதி ...
POST: 2025-10-15T10:04:13+05:30
Arul.2009/FB/#6752 "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி எனத் தொடங்கும் திருக்குறள் முந்நூற்(று) ஆறு; இனமென்னும் தமிழாய்ந்த அறிவுக் கதிர்களை அறிவன்தோறும் பரப்பிடும் உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஆறு
POST: 2025-10-14T10:14:47+05:30
Arul.2009/FB/#6751 நடையிலும் மொழிபெயர்ப்பு இன்று காலை (14.10.25) நடைப்பயிற்சியின் போது என்னைத் தாண்டி வேகமாகச் சென்ற பேராசிரியர் ஜெயபாபு என்னருகில் வந்து யான் அணிந்திருக்கும் மேல் சட்டையில் பொறிக்கப்பட்ட ஆங்கில வாசகத்தை Cosmic being Bring out your cosmic potential in order to master the universe உரக்கப்படித்துத் தமிழில் சொல்லுங்கள் என்றார் வானளாவிய இனம் என்று தொடங்கிப் பிறகு இப்படி மாற்றிச் சொன்னேன் சிந்தனையின் பிறப்பிடம் வையகத்தைத் தங்கள் பேரறிவால் வாகை சூடுங்கள்! இதைத்தான் மொழிபெ ...
