POST: 2013-04-22T16:05:35+05:30

தனித்து நிற்க முடியாமல் தள்ளாடுபவர்களுக்கு சாயும் தூணே ஊழலாகும்.(Dependency breeds corruption) தந்தை மகளையும்,மகள் கணவனையும், அதிகாரி அமைச்சரையும், அமைச்சர் தலைமையமைச்சரையும் நீதிமன்றங்களின் மீதும் சாயத்தொடங்கினால் ஊழல் உருவாகும். ஒரு இசுரேலியர்க்கு இருக்கும் மூளையைக் கணக்கிட்டால் இருபதாயிரம் இந்தியர்களுக்கு இணையாக சொல்லலாமா என்றால் ஆராய வேண்டும்.தில்லி மக்கள் தொகையை விட எண்ணிக்கையில் குறைந்தவர்களைக்கொண்ட இசுரேலிய நாடு இரண்டு பில்லியன் அமெரிக்க ரூபாய்க்கு நிகராக படைக்கருவிகளை ஆண்டுதோறும் இந் ...

POST: 2013-04-22T15:44:18+05:30

கடந்த 952 ஆண்டுகளாக அதாவது பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போப்பாண்டவர் தலைமையில் 107 அருட்பேரவைக்கூட்டங்கள்(Conclaves)நடைபெற்றுள்ளன.ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 207 தலைமை பெரும் பேராயர்கள்(Cardinals) இருந்து போப்பாண்டவரை தெரிவு செய்கின்றனர் இந்த பொருண்மைகள் அனைத்தும் எழுத்து விடாமல் இலத்தீன் செம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.இத்தாலிய நடைமுறையிலிருந்து இவை இலத்தீன் செம்மொழியில் எழுதப்பட்டனவாம். நூறாண்டு வரலாறுகள் எடுத்துக்கொண்டாலும் தமிழகத்தில் இருபதாவது சன்னிதானத்திற்கு முற்பட்ட ஆதின வரலாறுக ...

POST: 2013-04-22T01:13:27+05:30

கேட்பதை மறந்துவிடுகிறேன் பார்ப்பதை நினைவு கூர்கிறேன் கடமையாற்றும் போது தான் தெளிவடைகிறேன். I hear and I forget I see and I remember I do and I understand -Confucius

POST: 2013-04-19T12:17:46+05:30

கமல்ஹாசன் படத்துறையில் மட்டுமில்லை,பகுத்தறிவு தெளிவும் கொண்டவர்.விசுவரூபம் என்று எழுதாமல் விஸ்வரூபம் என்று எழுதுவதை இயக்குநர் சேரன் கேள்வி கேட்பதில்லை. இந்தியை வளர்ப்பது போல தமிழை வளர்க்க வேண்டுமென்று ஆர்வத்தோடு கமல் கருத்துரை கூறினார். பிழையான தமிழ் எழுதினாலும் பத்து மதிப்பெண்களை கூட்டிப் போட்டால் மாணவர்கள் தமிழ்ப்படிக்க வருவார்கள் களைகள் வளர வளர தானாக தமிழ் கவிழ்ந்து மிடுவல்லவா? எண்ணிப்பார்க்க வேண்டியது?

POST: 2013-04-18T03:51:09+05:30

செம்மொழி மாநாடு நடந்தது.பேருந்துகள் புறப்படுகின்றன -பிரஸ் என்று ஒட்டிய தலைப்பைக்கண்டு முதல் பேருந்து மிடுக்காகச்சென்றது.அடுத்த பேருந்து நகர முடியவில்லை.ஊடகம் என்று எழுதி ஒட்டியிருந்தது.காவல்காரருக்கு விளங்கவில்லை.இதைப்பார்த்து எங்களுக்கு வயிறு எரிந்தது.தமிழ் வேர்களைத்தேடி வந்த எங்களுக்கு அடி மரத்தை வெட்டும் அதிகாரிகளைக்கண்டு அழுதேன்.இவ்வாறு கூறியவர் மலேசியா திருநாட்டின் மாத்தமிழர் இனிக்க இனிக்க இளந்தமிழ் என்ற பெயரைக்கொண்டிருக்கிறார். அவர் இளஞ்செழியனோடு இணைந்து இணைய மாநாட்டினை மலேசியாவில் ஆகத்து ...

POST: 2013-04-15T15:41:40+05:30

சந்தியில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக்கேட்டு குழந்தையைக்கொன்றாராம் பாட்டியார்.சந்திரசாமி சொன்னதை கேட்டுப் தாத்செர் பதவி பெற்றாராம் தந்தை பெரியார் வலியுறுத்தியது பகுத்தறிவு.மூட நம்பிக்கையும் மூடாத நம்பிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே என்று காசு அளவுக்கு பொட்டு இடுகிறவர்களுக்கும்,புதை மேடைக்கு எதிரில் பூமாலைகளை வைப்பவர்களும் சீர்த்திருத்தம் பேசுவது ஊர் திருந்த எவ்வளவு பயன்படும்?

POST: 2013-04-15T15:30:51+05:30

இதுவரை தமிழ்நாட்டில் வெளிவராத நூலாக இருட்டடிப்பு செய்திருக்கும் பழைய நூலான திருக்குறளை பல்கலைக்கழகம் வெளியிடலாம் என்று ஒரு பேராசிரியர் பேசினார். பாதையோரத்தில் இருப்பவர்களுக்கும் பாரதியார் பாடலும்,பாரதிதாசன் பாடல்களும் பழக்கமாகிவிட்டன.திருக்குறள் மாநாடு 1948 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் நடத்தியது எவ்வளவு பெரிய புரட்சியென்று பல்கலைக்கழக பெரும் பேராசியர் பேசியிருக்கிறார் எந்தெந்த நாடுகளிலிருந்து பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை

POST: 2013-04-15T15:05:13+05:30

கட்டுக்காகிதங்களும்,பொன்னாடைத்துண்டு தோளில் ஊசலாட சரிகைத்தலைப்பாகையுடன் அன்றாடம் உட்லண்டு உணவகத்திற்கு வந்த பி ப பி ஸ்ரீநிவாஸ் ஏழு மொழிகளில் பாடல் எழுதுவார்,பாடுவார். கன்னடப்பாடகர் என்ற வகையில் உட்லண்டு உணவகம அவரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விருந்தினராக ஏற்றுக்கொண்டது. மயக்கமா,கலக்கமா,தயக்கமா என்ற பாடல் பாடியவர் காலம் முடிந்து கரை சேர்ந்து விட்டார். அசை,சீர் பிரிப்பதை என்ன சொல்லலாம் என்று ஒரு முறை என் தந்தையிடம் அவர் கேட்டபோது அளகிடுதல் என்றாராம்.அதை நினைவு கூர்ந்து குறைந்தது ஆயிரம ...

POST: 2013-04-14T20:12:57+05:30

தொழில்நுட்பவியல், இயற்கை வளங்கள், உற்பத்தி மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை அமெரிக்கா நாட்டின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் மாபெரும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. அமெரிக்கா வளர வேண்டும் என்று கனவு கண்ட ஒரு சிலரும் நவீன அமெரிக்காவின் உருவாக்கத்திற்கு வித்திட்டனர். ஆண்ட்ரூ கார்னகி, ஜான்ராக்பெல்லர், கார்னெலியஸ் வான்டெர்பில்ட், ஜே.பி. மார்கன் மற்றும் ஹென்றி போர்டு ஆகியோர் தங்களுடைய தொழில் ஆர்வம் மற்றும் புதுமையான அணுகுமுறை ஆகியவற்றன் வாயிலாக தொழிலை மேம்படுத்தினர். அது, அமெரிக்கா, நவீன தொழி ...

POST: 2013-04-12T22:14:57+05:30

அரிய பறவை என்ற வகையில் மயிலும், சிறப்பான விலங்கு என்ற வகையில் புலியும், சிறப்பான மலர் என்ற வகையில் தாமரை என்றும் கூறிவருவது ஒரு மரபாகும்.