POST: 2012-10-28T23:17:31+05:30

This evening attended Sri Padma Sundaram foundation inauguration ceremony at ITC Chola and distinguished Scholar and Administrator Par excellence V Sundaram IAS (Retd) had penned elegies about his beloved wife Padma who passed on this same day last year....

POST: 2012-10-28T23:12:24+05:30

இன்று காலை நான் 5ம் வகுப்பு வரை படித்த வள்ளியம்மாள் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர்,நல்லாசிரியர் விருது பெற்ற புலவர் இராமலிங்கம் அவர்களின் முத்து விழாவில் கலந்து கொண்டேன். என் தந்தையாரின் சொற்பொழிவு சீர்மிகுந்த ஒரு நாடு எப்படி முதுமை நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சொன்ன விதம் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்தது....

POST: 2012-10-25T14:10:25+05:30

நமது கட்டிட விருப்பம் மாறுபட்டது நாம் ஆடம்பரத்தை விரும்புகிறோம் – நல்லதையல்ல. பளபளப்பை விரும்புகிறோம் – எளிமையானதை அல்ல. விலையுயர்ந்ததை விரும்புகிறோம் – தூய்மையானதை அல்ல. அலங்காரத்தை விரும்புகிறோம் - பயன்பாட்டைக் கருதுவதில்லை. நமது தனியார் கட்டிடங்கள் ஆடம்பரத்தின் அடையாளமாகும். நமது வீடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் குளிர்சாதன இயந்திரம் இருக்கிறது. நம் நாட்டுப் பருவ நிலைக்கு ஏற்ற அறைகள் இருக்காது. சாளரங்கள் இல்லாத அறைகள் உள்ளன. விலை உயர்ந்த பளிங்கு பதித்த தரை, பெரிய கண்ணாடி, அலங்கார முகப்புகள ...

POST: 2012-10-25T14:07:50+05:30

ntil beams o Setup kitchen ventilator and bathroom ventilators o Sheet centring for beams and also roof o Fix sheets based on water level o Apply plaster for the gaps between sheets o Apply oil for sheets o Bar bending work for beams and roof o Inverter beams o Electric pipes setup inside roof o Molding o Storing water on top of the roof o After 18 days remove sheet centering o Hocking for the roof if not done for the pillars o Electric pipes o Clear any blockage in the roof pipes o Laying ...

POST: 2012-10-24T12:04:01+05:30

கொடுங்கோலன் வழங்கிய குதிரை -------------------------------------------------------------------------------- என் கணவரின் அண்ணன் வீர சக்கர விருதுப்பெற்ற போர்த்தளபதியாக இருந்தவர்.அவருக்கு நூல் எழுதும் ஆர்வமும் இருந்தது. போர்ப்படையின் நுணுக்கத்தின் முதன்மைக்குறிப்புகள் (Essentials on Military Knowledge)என்பது நூலின் பெயர்.ஆங்கில நூலைப்பார்த்த லிபியா நாட்டின் அதிபர் கடாபி ஆங்கில நூலை அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தாராம். ஆங்கிலம் தெரிந்தவர்களை மொழி பெயர்த்தாலும் மூல நூலாசிரியரின் கருத் ...

POST: 2012-10-22T13:53:11+05:30

விடுதலையில் இல்லை இந்துவில் தான்! ----------------------------------------------------------------------------- அலை புரள கரை புரள காவிரியாறு ஓடும் கருநாடகத்தில் கார்மழை பொழிய வேண்டுமென்று கடவளுக்கு வழிபாடு கணக்கில்லாத செலவை செலவளித்திருக்கிறார்களே என்று கறுப்புச்சட்டைக்காரன் அல்ல பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றும் வசந்த் நடராஜன் அறிவியல் சிந்தனையில்லாமல் இந்த நாடு அலங்கோலமாகிறதே என்று விடுதலையில் இல்லை மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு என்று அண்ணாவால் பரிகசிக்கப்பட்ட ...

POST: 2012-10-21T21:49:27+05:30

புராணாப் புதையலாக திரைப்படங்கள் இருந்த காலம் போய் அறிவியல் புதையலாக எப்படி மாறுகிறது என்பதை கலைஞானி கமலஹாசன் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். உலகக்கதைகள்,அறிவியல் மாயங்களோடு திரைப்படங்களாக வெளி வருகின்றன என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்னரே தாமும் இயக்குநர் மணிரத்னமும் நாயகன் படத்திற்காக சிந்தித்ததை சுவையாக எழுதியிருக்கிறார்.

POST: 2012-10-21T21:39:12+05:30

மதுரையில் மீண்டும் திருவிளையாடல்: கடவுள் கடிதம் போட்டு கருநாடகக்காளையை மடத்திற்கு அழைத்து வரச்சொன்னாராம் இப்போது அதே கடவுள் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நீக்கம் செய்ய சொன்னாராம். ஆதீனங்களையும் மடங்களையும் அறவே நீக்கும் வரை ஆதீனப்பூசல் ஊரை கெடுத்துக் கொண்டு தான் இருக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு..

POST: 2012-10-20T22:04:25+05:30

இன்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கத்தில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள், செய்தித்துறை அரசு செயலரின் முன்னிலையில் கருத்துரை வழங்கினேன்