1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும்.
கொடுமையை பொறுக்க முடியாதபோது பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள்.
ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட ஏழ்மையில் தான் அடங்கும் .
ஏமாற்றம்,தோல்வி முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் வழக்கம் வந்திருக்கக்கூடும்.
ஓடிப்போய்த் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி சொல்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் .
கண நேரத்தில் ஏற்படும் கலக்கமும்,தவிப்பும் இந்த முடிவுக்கு இழுத்துச் செல்கிறது .அந்த நேரத்தில் தடுப்பவர்களோ அறிவுரை கொடுப்பவர்களோ இருந்தால் ஏற்படாது என்று மன நோய் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பொட்டி ஸ்ரீராமுலு இறந்த போதே அவர் வயிற்று நோயாளி என்று கூறினார் மேனாள் முதல்வர் பக்தவத்சலம்,உயர்ந்த ஒரு நோக்கத்தை விட்டுக்கொடுத்து உயிர்ப்பிச்சை தாருங்கள் என்று கஸ்துரிபாய் அம்மையார் கதறிய போது அண்ணல் அம்பேத்கர் கேட்டு இசைந்தார் என்பதாக ஒரு கதை உண்டு.
தமிழர்கள் மீது பண்பாட்டுப் படையெடுப்பு என்ற நூலில் அறிஞர் அறவாணன் தற்கொலைப்பற்றி விழுக்காட்டு எண்ணிக்கையோடு குறித்திருக்கிறார் .
2)பாட்டு எழுதியவர் அன்பின் அடைக்கலம்,அழகோ படைக்கலம் என்று எழுதியதை ஆர்மோனிய பெட்டிக்காரர்கள் களம் என்று திருத்தியதாகவும் அடைக்கலம் என்றால் சரணாகதி என்றும் திருத்தியதைக் கண்டு நான் என்ன செய்ய முடியும் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தன் நெஞ்சில் தேக்கியதை கவிஞர் முத்துலிங்கம் அண்மையில் குறிப்பிட்டார்.
3)மாறன் அம்பு பட்டு மனம் கலங்குதே என்றத் தொடரில் முரசொலிமாறனுக்கு கோபம் வருமே என்று திருத்த சொன்னதை கவிஞர் ஒருவர் சொன்னார்.
மாறன் என்பது வல்லினமாக வரும்போது பாண்டியனைக் குறிக்கும்.இடையினம் வரும்பொழுது வடமொழியில் குமாரன் என்று குறிக்கப் பெறும்.
இரண்டு ரகரங்கள் ஏன்? சிக்கனம் கருதி நீக்கி விடலாம் என்ற போக்கு மாணவர்களிடையே இன்னும் ஏற்படவில்லைப்போலும் !

Add a Comment