POST: 2011-11-29T12:45:49+05:30

உய்வில்லை -நன்றி கொன்ற மகற்கு

அண்மையில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பை GV Pappusamy செய்திருக்கிறார்.இது தான் திருக்குறளின் முதல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு என்று எழுதியிருக்கிறார்.நாமெல்லாம் GU Pope என்ற பெயரைத் தான் நினைத்தோம்.இப்போது தான் தெரிகிறது GU Pope,Pappusamy என்ற பெயரில் நம்மோடு வாழந்து கொண்டு இருக்கிறார் என்று…இது நகைச்சுவை அல்ல !

அறிஞர் இலெனின் தங்கப்பா சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்,தமிழறிஞர்,நற்பண்பாளர்.முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் அண்மையில் மொழிப்பெயர்த்து இருக்கிறார்.இதற்கு முன்னரே AV
சுப்ரமணியமும்,PN அப்புசாமியும் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளனர் .திரிவேணி இதழில் பேராசியர் கே சுவாமிநாதன் சில பாடல்களை மொழிப்பெயர்த்து இருக்கிறார்
முத்தொள்ளாயிரத்தை பேராசியர் சேது ரகுநாதன் விளக்க உரையோடு எழுதி ஒவ்வொரு மேடையிலும் பாடிப்பரப்பினார்.

இவர்களையெல்லாம் நினைவு கூறத்தேவையில்லையென்று நாடு நினைக்கிறது போலும்.எல்லாம் தெரிந்த திரு இந்திரா பார்த்தசாரதி இன்றைய இந்து நாளிதழில் மதிப்புரை எழுதும்பொழுது இவற்றை குறித்திருப்பார் என்று எதிர்ப்பார்த்தோம்.
எந்த ஓர் இலக்கியத்தையும் மொழிபெயர்த்தவர்கள்;அதற்கு முன்னால் செய்தவர்களை நன்றியோடு நினைவு கூர்தல் ஆங்கில வாணர்கள் வலியுறுத்துகிற கடமையாகும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *