POST: 2012-01-03T12:57:12+05:30

யூதர்கள் தனிநாடாக பிரிந்தபோது ஐன்ஸ்டீன்ஐ குடியரசுத்தலைவராக வர அழைத்தார்களாம்.முதுமை காரணமாக என்னால் வர இயலவில்லை என்று மறுத்தார்.
இந்தியாவிலோ வயது முதியவர்கள் தான் கால் நொண்டியானாலும் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெறுவதற்கு முன் நிற்கிறார்கள்.சகல கலா வல்லவர் என்று மதிக்கப்பெற்ற சர் சி பி அவர்கள் ஐன்ஸ்டீன்ஐ திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1937ல்அழைத்தபோது இசையவில்லையாம்.
இங்கேயோ கைப்பெட்டியை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக துணைவேந்தர் பதவிக்கு ஏங்கி நிற்கிறார்கள்.விமான
நிலையத்தில் நிற்பது போல வட்டிக்காரர்கள் எவ்வளவு கோடிக்கு எவ்வளவு வட்டி பேரம் பேசியபடி நிற்கிறார்களாம்.இந்த நாடு தான் வல்லரசாகப் போகிறது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *