POST: 2012-01-18T14:32:15+05:30

சுவிட்சர்லாந்தில் செருமானிய மொழியில் ஒரு திரைப்படம் வந்தது.அந்தப்படத்திற்குப் பெயர் (Madley in love) காதலில் காதல் பித்தம் என்பதாகும்.2009 ல் இப்படம் வெளிவந்தது.இந்தப்படத்தில் செருமானி,பிரஞ்சு,ஆங்கில மொழிகளில் உரையாடல் உண்டு.படத்தின் நடிகர்கள் மூவரைத்தவிர எஞ்சியோர் யாழ்ப்பாணத்தமிழராவர்.ஒரு தமிழ் இளைஞனுக்கும் முன்னரே தாயான ஒருத்திக்கு இடையே மலர்ந்த காதல் தான் கதை.இந்த அழகில் யாழ்ப்பாணத்தமிழர்கள் மேலை நாட்டில் தம் பழைய மரபுகளை காப்பதான ஒரு மயக்கமும் இப்படத்தில் நிழலாடுகிறது.
தமிழ் இளைஞன் செருமானிய மொழி பேசி நன்றாக நடிப்பதை பாராட்டியிருக்கிறார்கள்.வாழ இனம் தேடும் இனம் எப்படி கலக்கிறது! இது ஒரு சான்று!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *