ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்தல்,பதிப்பித்தல் என பல பித்தலாட்டங்கள் கடந்த நூறாண்டுகளாக தொய்வில்லாமல்
இவ்வளவு இடங்களிலும் சேமித்தும் கண்டும் காணாமலும் நடந்து வருகிறது. நூற்றுக்குத்தொண்ணூறு பங்கு ஓலைச்சுவடிகளும்
விளங்காத மருத்தவக்குறிப்புகள் என்பர். தமிழ்க்கடல் உவே சா விற்கு பிறகு ஓர் ஓலைச்சுவடியிலிருந்து ஒரு நூல் தமிழுக்கு அணிகலனாக வெளிவரவில்லை.ஆட்டுக்கு தாடி ஏன்,அதே போல ஒண்டமிழ்த்தாய் முன்னேற்றத்திற்கு எந்த ஓலைச்சுவடியும் பயன்படவில்லையே என்ற ஏக்கத்திற்கு விடை எழுதுவது? தேடிப்போய் திரிவதற்கு கோடித்தொகை கொடுங்கள் என்று கைநீட்டி ஆய்வாளர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நெல்லையில் ஒரு பள்ளி ஆசிரியர் அண்மையில் முறையிட்டு இருக்கிறார் ஒரு கூட்டத்தில்!!

Add a Comment