POST: 2012-02-24T11:23:17+05:30

திருக்குறள் அமைப்பில் காதல் கோட்பாட்டினைத் தெளிவுற விளக்குவது காமத்துப்பால். இருவர் நெஞ்சங்கள் இழைந்து கலந்து உயர்ந்து நிற்கும் காட்சிகளைக் கடுகினும் சிறிய தொடர்களால் கவினுறக் காட்டுவது காமத்துப்பால்.

குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்தினையும் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றனுள் பெரும்பான்மையும், உரிப்பொருள் பற்றிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரே ஒரு நிலத்தில் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்து அதிகாரத்தால் சுட்டிக்காட்டி வடநூலும் தமிழ் நூலும் கூறும் பொருள் எல்லாம் தொகுத்துக் கூறியதே காமத்துப்பாலின் அமைப்பென்பது அறிஞர் கொள்கை!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *