விரக்தி வாழ்வை விரும்பி ஏற்ற எமிலி பிராண்டின் கனவு வரிகள்
துறவு முதிர்ச்சி
அளந்த செல்வமோ எனக்கு அற்பக்குப்பை
விளைந்த காதலோ வெறுப்பின் சிரிப்பு
புகழின் போதையோ அது புகைந்திடும் கனவு,
விடியும் என்பது ஒரு நாள் முடியும்
படியும் என் நெஞ்சில் பாதி வேண்டுவது இது ஒன்றுதான்
கனத்த நெஞ்சின் கட்டுக்கள் விலகி நினைத்த சுதந்திரம்
நிலைத்து நிற்கட்டும்.
இதுதான் என் இறுதியை நோக்கிய பயணம் இறைவா!
உன்னிடம் இறைஞ்சுவது இதுவே
வாழ்விலும் தாழ்விலும், வலிவிலும் நலிவிலும்
தோயும் பற்றில் துளியிமில்லாத தூய்மையே வேண்டவே
துடிக்கிறேன் இதனையே!

Add a Comment