POST: 2012-03-15T11:24:57+05:30

இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் சங்கரர் இராமாநுசர், மத்வர் என்னும் மூன்று பெயர்களும் முக்கியமானவை.

இம்மூவரும் ஞானப்பேரரசர்களாக விளங்கியவர்கள், முறையே அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என்னும் கோட்பாட்டை வழங்கியவர்கள்.

இம்மூவருள்ளும் சமய தத்துவ எல்லையைத் தாண்டிப் பொது நிலையில் உள்ள பலராலும் அதிகம் பேசப்பெறுபவர் இராமாநுசர் ஒருவரே.

கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்களும் இராமாநுசரை வியந்து நோக்கியதையும் நயந்து போற்றியதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமாநுசனை ஈன்ற தன்றோ?“

என்னும் பாவேந்தரின் பாராட்டுரை இவ்வகையில் நினைத்தற்குரியது.

இதில் இராமாநுசரின் பிறப்பு தமிழ்நாட்டின் தவப்பயன் என்று சிறப்பித்திருப்பது குறிக்கொள்ளத்தக்கது…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *