மணியாச்சி போலி,மனப்பாரை முறுக்கு,காஞ்சி இட்லி,அய்யாறு அசோகம்,கண்ணமங்கலம் சுண்டல்,பேரளம் வடை என்று சொல்வார்கள்.
அதேப்போல மடித்த ரொட்டிக்கு மங்காத புகழ் சேர்த்த ஊர் தான் சண்ட்விச்(Sandwich) நகரமாகும்.
எளிய விரல் நகத்திற்கும் கூட விரிவான வரலாறு
எழுதும் பழக்கம் இங்கிலாந்து காரர்களின் இயல்பு.
ஆயிரமாண்டு பழமை இருந்தாலும் அதை கணக்கிடத்தெரியாத கலக்கம் தமிழர்களுக்கு உண்டு.
ஆண்டையே அறுபதுக்கு மேல் எண்ணத் தெரியாதவர்கள் sandwich உண்ணத் தொடங்கி 250 ஆண்டு விழாவாக நடைபெறுவதை நெற்றி உயர்த்தி பார்க்கிறோம்….
ஒரு தின்பண்டத்தின் பெயரும் திருக்குறளில் இல்லை!

Add a Comment