POST: 2012-05-28T15:50:22+05:30

எவனக்குப்பின் எவன்?
—————————————————————————–
புகழ்வாய்ந்த ஒருவர் மறைந்த பிறகு தனக்குப்பிறகு தன்னைப்போல் சிந்திக்கும் ஒருவரை தன்னுடைய அறுபதாம் அகவையிலாவது பண்படுத்த வேண்டும்.

நாவலர் நாட்டார் மணிமேகலை உரையெழுதி நிறைவேற்றாமல் மறைந்தார்.உரைவேந்தர் ஔவை துரைசாமி அந்தக்கடைசி பகுதிகளை சமண பௌத்த நூல்களோடு தோய்ந்து உரை எழுதினார்

அறிவியலாளர்கள் நால்வர் ஐவராகக்குழு அமைத்துக்
கொள்வர்

மகப்பேற்று இயலில் மருத்துவமாமணி முதலியார் ஐ புகழ்ந்தவர்கள் மருத்துவர் பாஸ்கர ராவை புகழவில்லையா?சிறுநீரகவியலில் நாற்பதாம்
அகவையிலேயே மருத்துவர் அமரேசனை பாராட்டவில்லையா?

தத்துவத்துறை,விண்வெளியியல்,தொல்லியல் முதலியப்பாட நிலைகளில் மாணவர்களே சேரவில்லை?

முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் மூவர் நால்வர் பல்லாண்டுகளாக பணியில் இருந்தவர்கள் என்ற பரிவுக்காக தொடர்ந்து வருகிறார்கள் என்ற திருவாசகம் இருக்கிறது

அவருக்குப்பின் எவரும் இல்லையென்று நேருக்காலத்திலிருந்து நேற்று வரை புலம்புகிறார்கள்

எவனாவது வருவான் ஏதாவது செய்வான் இவனைப்போல் இல்லையென்று எழுத ஊடக மூடர்கள் குவிந்தபடி தான் இருக்கிறார்கள்…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *