நாட்டளவில் சில பொருட்களை தேசிய சின்னம் என்று அழைப்பது வழக்கம்.புலி,தாமரை,கங்கை நதி,ஆக்கி விளையாட்டு,மயில்,டால்பின் இவைகளையெல்லாம் சொல்வது வழக்கம்.இது ஒரு கேலிக்கூத்து!
சென்னையைச் சுற்றி ஓடும் கூவத்தை கங்கை என்று அழைக்கலாம்.மாற்றாக காசியில் ஓடுவதை கூவம் என்றே அழைக்கலாம்.நாற்றத்தில் மிஞ்சுவது கங்கையா கூவமா என்று திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் வைக்கலாம்!!
கழுத்தை பிடித்து தள்ளினாலும்,கால் வயிறு கஞ்சி ஊட்டினாலும் கணவனே எனக்கு கண் கண்ட தெய்வம் என்று பாராட்டும் பதி விராதா தருமத்திற்கு
சான்றாகச் சிலையாக நிற்பது கண்ணகி சிலை போலத் தெரிகிறது!
நீலத்தலைப்பாகை அலுவாலியார் அசாமுக்கு வந்த
போது தேநீர் இந்திய தேசியக் குடிநீர் என்கிறார்.சீனாவுக்கு என்ன சொல்வது?
தேசிய சின்னம் என்று சொல்லுகிற போதே அதற்கு சீர்குலைவு ஏற்பட்டு விடுகிறது.திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள்.முப்பது ஆண்டுக்காலமாக இந்த முறையீடு இருந்து வருவது தான் வியப்பு!
இசுலாமிய பெருமக்கள் புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எடுக்க வேண்டுமென்கிறார்கள்!!

Add a Comment