இங்கிலாந்து நாட்டு அரசி முடிசூட்டிக்கொண்ட பொன்விழாவில் ஓர் அவலமான நிகழ்ச்சி நடக்கிறது.
பிழையில்லாமல் இலக்கியச் செறிவோடும் மெருகோடும் ஆங்கிலத்தைக் காத்துவரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அரசியார் ஆங்கில ஆய்வு நிலையத்தின்(Queens English Academy) மணிவிழா நடைபெறுகிறது.
இந்த ஆய்வு நிறுவனத்தைக் காத்து வளர்க்க வேண்டும் என்ற கருத்தோடு, விரும்பும் போது துணுக்குச் செய்திகளும்(Twitter) தொலைபேசியின் நறுக்கு ஆங்கிலமும்(Text speak) படையெடுத்து ஓங்கி வருகிற காலத்தில், ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு விண்ணப்பிக்குமாறு பேராசிரியர்களை வேண்டினார்கள்.
எவரும் விண்ணப்பிக்க வில்லை. ஆய்வு நிறுவனத்தை இழுத்து மூட முடிவு செய்திருக்கிறார்கள். இது ஆங்கிலத்தின் அவலம்!!
அதே நேரத்தில் இன்னொரு செய்தி: சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலைக்கு முதுகுப் புறத்தில் உள்ள குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையம் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. பல அரிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.
மைய அரசு நிதி வழங்காமல் உதவியை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ஐஐடி மாணவர்கள் தம் குழந்தைப் பருவத்தில் அப்பா ஓதிய வேத மந்திரங்களை நினைவு கூர்ந்து தாங்கள் நிதியுதவி செய்து சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையத்தை தலைநிமிரச் செய்வோம் என்று முன் வந்திருக்கிறார்கள்
பிறமொழிக்கு அடிக்கிறது யோக!

Add a Comment