ஆனை மாலையிட்டு அரசன் ஆனான் கதை கிருஷ்ணகாந்த் மறைந்ததைக்காட்டி அப்துல் கலாம் கழுத்தில் மாலை விழுந்ததை நட்வர் சிங் எழுதிக்காட்டியிருக்கிறார்.மாலை கழுத்தில் விழுந்ததும் மாபிள்ளைக்கு மிடுக்கு வருவதைப்போல அப்துல் கலாம் கனவு
காணச்சொல்லும் மதிவாணர் ஆனார்.ஆசை எனக்கில்லை அடுத்த முறையே எனக்கு கிடைக்காமல் போனால் என்ற நீதி மொழியை அப்துல் கலாம் தான் சொல்ல முடியும்.
நாராயணன் நடக்க முடியவில்லை என்று சொல்லி பிலிப்பின்ஸ் போக மறுத்தார்.ஆனால் ஸ்வீடன் போக இசைந்தார்.அவருடைய மகள் தான் இந்தியத்தூதர்.மகள் வீட்டுக்கு போனால் கால் சரியாகி விடுமல்லவா?
தில்லி மாநகரைச் சுற்றி சமையல் வேலை,சவரக்கடை நடத்தல்,பள்ளியில் படித்தல்,ஓடும் கார்களுக்கு எதிரில் தினசரிகளை விற்றல்,கோயில்களில் புரோகிதம் செய்தல்,நேரு வீட்டு எதிரில் குப்பை லாரி ஒட்டுதல் இவர்கள் வீட்டுப்பிள்ளைகள் தான்1947க்கு பிறகு தூதுவர்களாகவும்,மத்திய அரசின் அதிகாரிகளாகவும் வந்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் சுவையாக இருக்கும்.இவைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தின் மர்மங்கள் என்றே நட்வர் சிங் மேலும் எழுத வேண்டுமல்லவா?

Add a Comment