அனைத்திந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளர்களே பணியாற்றியக்காலம் உண்டு.சிட்டி,மாயாவி,துறைவன்,அகிலன்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்
வானளாவி வளர்ந்த அகிலன் ஞானபீட விருதுப்பெற்றவர்.எழுதி எழுதி தேய்ந்து ஓய்ந்து போன நிலையில் நினைவு மறதியால் வாழ்வின் இறுதி நாட்களில் அவதியுற்றார்.அடக்கி வைத்திருந்த அவலம் தான் இப்படி முடுக்கி விடும் என்று படித்திருக்கிறேன்.
பணிவும் பரிவும் காட்டுவதில் தந்தையின் புகழ்க்கொடியை இன்றுவரை உயர்த்திப்பிடிக்கும் அண்ணன்,அகிலனின் மைந்தன் தான் அகிலன் கண்ணன்.
தமிழ்ப்புத்தகாலயம் அத்திருமகனை மருமகனாக ஏற்று பெருமிதம் அடைகிறது.நா பாவின் நற்றமிழ்க்கும் புத்தகாலயம் தான் பூஞ்சோலையாக மிளிர்ந்தது.
நேற்று மாலை அகிலன் கண்ணன் வானொலியில் நேர்த்தியாக நெஞ்சில் ஓர் ஓவியமாக எழுத்துச்சிகரம் அகிலனின் 90வது பிறந்த நாளை
முன்னிட்டு சொற்காவியம் படைத்தார்.

Add a Comment