POST: 2012-07-12T22:10:52+05:30

அந்தோ!அந்தோ!
ஆண்டோ பீட்டரை காண்பது என்றோ!

பீட்டர் என்றால் பெரும்பாறை,உன் சிகர வாழ்வு இப்படிச் சீர்குலைவதா?

எங்கும் தமிழ்,எதுவும் கணிப்பொறியே என்றாயே! பொங்கும் புதுமைச்சிற்பியே!
நாளும் என்னை உன் தோளில் சுமந்தாயே!

பாழும் உலகத்தில் பழக்கத்தால் வீழும் மனிதர்களை விரும்பிச்சாகின்றவர்களைக்கண்டு எப்படி ஆறுதல் கொள்வது…

நீயிருந்தது தமிழ்க்குடில், உன் துணையோ எல்லாச்சிறப்பும் கொண்ட ஸ்டெல்லா அண்ணியார் உனக்குப்பிறந்தவை அமுதங்கள்.

நேற்று வரை என்னோடு பேசினாய்,
நான்கு வாரங்களுக்கு முன் தஞ்சைக்கு அழைத்துச்சென்றாய்,கடலளவு ஆசைகொண்டிருந்தாய்…

எட்டிச்சிகரத்தைத்தொட நினைத்த உன்னை வெட்டி வீழ்த்தியது எது?

மற்றவர்களை நான் மறப்பேன்;ஆனால் கைபேசியைத் தொடும் போதெல்லாம் கலங்குகிறேன்.

கணியரசு என்று அழைத்தோமே இப்போது எங்கே அரசு செய்யப்போகிறாய்?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *