அச்சு வடிவேறும் ஏடுகள் எவையும் நான்கு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசாணை.
கொல்கத்தா நூலகம்,சென்னையில்
கன்னிமாரா நூலகம்,அரசு செய்தித்துறை
இன்னும் ஒன்று நினைவில்லை.இதனை ஏற்பாடு செய்தது வெள்ளையர் ஆட்சியே!இதனாலயே
கீழ்த்திசை சுவடி நூலகம் என்ற ஓர் அமைப்பு சென்னைப்பல்கலைகழகத்தில் உள்ளது.
இதனைத்தொகுத்து ஆண்டு வாரியாக
தமிழ்வளர்ச்சித்துறை நூலாக வெளியிட்டு வந்தது.இதன் விவரம் முழுவதும் அறிஞர் மா இராசேந்திரன் நன்கறிவார்.இதில் ஓலைச்சுவடிகளின்
பெயரும்,உட்பொருள் குறிப்பும் பெற்றிந்தன.
இதேப்பணியை தொல்பொருள்ஆய்வு நிறுவனமும்,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும்,தமிழ்ப்பல்கலைகழகமும் செய்துள்ளன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர்
மேஜர் அ கிருஷ்ணமூர்த்தி குடந்தைக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர்.
ரஷ்யா சென்று ஈராண்டுகள் தங்கியிருந்து திரும்பி வந்து இரண்டாண்டுகளில் லண்டன் முதலாய ஐரோப்பிய நாடுகளின் நூலங்களில் உள்ள தமிழ் ஏடுகளை விவரத்தோடு தேடி எழுதி
ஐந்து தொகுதிகளாக வெளியிட்டார்கள்.இது பற்றிய விவரத்தை அறிஞர்கள் மேலும் கூறுவார்களாக?
தொல்காப்பியம் கிடைக்கவில்லையென்று தேடுவதற்கு ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் இதை ஒரு காரணமாக காட்டி ஜெர்மனிக்கு மூன்று
முறை சென்று வருகிற மூடத்தனம் ஒழியும் நாள் எந்நாளோ?
தேடுவதற்கு ஒன்றுமில்லை தாண்டவக்கோனே! தேடியதை படிக்கத் தெரியவில்லை
தாண்டவக்கோனே!
ஓடுவதும் உருள்வதும் தான்,உருப்படாத ஆராய்ச்சியென்று ஓங்காரமிடடா தாண்டவக்கோனே!

Add a Comment