அருந்தமிழில் அயற்சொற்கள் நூலின் பின் அட்டையில் முனைவர் அருளைப்பற்றிவெளியான கவிஞர் கபிலனின் கவி மழை:
குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்;வானின்
குருத்துநிலா ஒளி போன்ற அழகன்;அந்த
மயில் தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்;
மாளிகையில் விலைபோகும் மனிதன் இல்லை;
வெயில் மீது நடந்தாலும் கறுக்க மாட்டான்;
வின்மீணைக்கூறு கட்டி நிலவு செய்வான்
அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆயந்தான்;
எங்கள் ஒளவைத்தாய் பெற்றறெடுத்த ஆத்தி சூடி:
மருக்கொழுந்து வாசம் தான் பேச்சு;சென்னை
மாநிலத்துப்பல்கலையில் தமிழைக் கற்றான்;
கறிக்குழம்பு உண்ணாத சைவப்பிள்ளை;
கவிதைக்கும் உரைநடைக்கும் பிறந்த பிள்ளை;
வரிப்புலி தான் வரிக்குதிரை அல்ல;முப்பால்
வளர்ப்பு மகன்;மூதறிஞர் பேரன்;உப்புக்
கரிக்காத தமிழ் உணவு;கம்பன் செய்யுள்;
கணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து

Add a Comment