Bayon என்பது அங்கோரில் உள்ள ஒரு கோயிலின் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்து, அதை அப்படியே தமிழில் எழுதுமாறு, இரு மொழிகளும் நன்கு அறிந்த மூவர் கூறியது, ‘பயன்‘ என்று ஒருவரும், ‘பயோன்‘ என்று இன்னொருவரும், ‘பேயன்‘ என்று மூன்றாமவரும் எழுதினார்கள்
இரு மொழிகளையும் நன்கறிந்த மேலும் மூவரிடம், இந்த மூன்று சொற்களையும் ஆங்கிலத்துக்கு மாற்றி எழுதுமாறு கேட்டதற்கு ‘Bayan‘ என்று ஒருவரும், ‘Payon‘ என்று இன்னொருவரும், ‘Peyan‘ என்று மூன்றாமவரும் எழுதினர்.
ஒரு மொழியிலிருந்து, அம்மொழிச் சொற்களை அயல் மொழியில் எழுதினாலும் நிலை மொழியின் ஒலிப்பையே பெயர்ப்பு மொழியில் காட்டமுடிவதில்லை. இந்த இடர்கள் மொழியாளர்களிடம் தவிர்க்கவொண்ணாதவை!

Add a Comment