POST: 2012-08-21T22:29:23+05:30

கண்டறியாதன கண்டேன்…

கருநாடக மாநிலத்தில் காவன நகர் என்று பெரிதும் பாராட்டப்பெறும் பெங்களூர் சென்று வந்தேன்.

பூங்காக்களின் பொலிவை புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும்.ஒரு பன்னாட்டு கணினி நிறுவனம் பார்த்தேன்,வியந்தேன்,மகிழ்ந்தேன்.அமெரிக்கரின்
திறமையைக்கண்டு புகழ்ந்தேன்.

ஒரு அலுவலகம் கற்பனைக்கு எட்டாத வசதிகளை பணியாளர்களுக்கு செய்து தர முடியும் என்பதற்கு
சிகரமாக நிற்கிறது.

ஓய்வறை,உணவறை,சாய்வு இருக்கை,நீவு நாற்காலிகள்,கழுத்துப்பிடிப்பு,தோள் மெத்தனை,கணுக்கால் நீவுகை என்று
பல்வேறு முறைப்பாடுகள் பொருத்தப்பட்டுருக்கின்றன. வீட்டிற்குத் திரும்பவேண்டும் என்ற நினைப்பே பணியாளர்களுக்கு வராது.

வசதிகள் பெருகினால் வந்து பணியாற்றுவோருக்கு வாணிகம் வளரும்.வளர்தொழில் நிமிரும் என்பது அமெரிக்க கணக்கு!

சுழலும் விசிறிகள் இருந்தால் சோம்பல் வளரும் என்று தான் நாம் நினைப்போம்.

எதிர்காலம் இத்தகைய நிறுவங்களை வடிவமைக்க வேண்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *