POST: 2012-08-25T22:10:47+05:30

எவ்வளவு முயன்றாலும் ஒரு நாட்டில் தாய் தந்தையருக்கு பிறந்த பிள்ளைகளுக்கே இன்னொரு நாட்டின் மொழியை சூழல் கருதிக்கற்று கொள்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.எனவே தாய்மொழியைத்தவிர பிற மொழிகளை அறிவதென்பது அரிதினும் அரிது!

ஒரு பாடப்புத்தகத்திலும் காந்தியோ,நேருவோ எழுதியக்கட்டுரைகளை ஆங்கில நாட்டில் பாடமாக கருதியதில்லை.ஒரே அயல் நாட்டார் ஆங்கிலம் எழுத வல்லவர் என்று டாக்டர் லின் யு டாங் ஐ தான் எற்றுக்கொண்டார்கள்.நாம் மெத்தப் புகழும்
பெருந்தகை நாவேந்தர் சீனிவாச சாத்திரியார் பேச்சைக்கேட்டு எந்த மொழியில் பேசினார் என்று ஆங்கில நாட்டில் ஒருவர் கேட்டாராம்.

எனவே சீன மொழியை கற்றுக்கொள்வதற்கு இருபதாண்டுகள் தேவைப்படும்.ஆனால் ஆறு மாதத்தில் செயன்முறை சீன மாந்தரின் மொழியைக் கற்பிக்க கன்புசியஸ் ஆய்வுக்கல்வி நிறுவனத்தை தொடங்க இருப்பதாக இன்று செய்திகள் வந்துள்ளன

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *