POST: 2012-08-27T13:30:39+05:30

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள் என்பர்.

இறைவனைப் போலவே, இறைவன் புகழ்பாடும் தமிழும் இனிக்கும். தமிழ் என்றாலே இனிமை என்றொரு பொருளும் உண்டு. அன்பே சிவம் என்பது போதுபோல் தமிழே சிவம் என்றும் கூறலாம் என்று அன்பர்கள் சிறப்பித்துப் பேசுவர்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *