POST: 2012-09-22T14:20:45+05:30

இலக்கியம் என்பது ஓர் இலக்கினை இனிமையுற எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு. அதனை நாம் தேடிக்கண்டு கடைப்பிடிக்க வேண்டும்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரத்தின் இலக்கு!

உடன் பிறந்தவர்கள் மீது பாசம் காட்டுவது இராமாயணத்தின் இலக்கு!

அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது மகாபாரதத்தின் குறிக்கோள்!

“அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழுஇல” என்பது திருக்குறளின் இலக்காகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *