POST: 2012-11-07T23:16:43+05:30

இன்று மாலை நான் முதுகலை,முதுநிலை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழக அரங்கில் எந்தையார் திருக்குறள் -ஆங்கில மொழிபெயர்ப்புகள்
என்ற ஆழந்த தலைப்பில் நுணுக்கமாக பல தகவல்களுடன் உரையாற்றினார்.

நூற்றுக்கு மேற்பட்ட ஆங்கில உரைகள் வந்தாலும் இன்னும் செறிவாக ஆங்கிலேயேர்கள் கொண்டு நுட்பமாக தமிழறிஞர்கள் குழுவாக ஆங்கில உரை ஒன்று திருக்குறளுக்கு அணி சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சான்றாக வான் மழை பற்றி மேனாட்டார் அதிகம் கவலைப்படமாட்டார்கள்.அவர்கள் மழலையர்கள் விரும்பிப்பாடும் ஆங்கிலப்பாடல் Rain Rain go away என்பதாகும்.அறிஞர் ஜி யு போப் தன்னுடைய ஆங்கில உரையில் திருவள்ளுவர் வறண்ட பகுதியை சார்ந்தவர் ஆவாதால் மழைப்பற்றி மருகினார் போலும்.

அறிஞர் ஜி யு போப்,வ வே சு ஐயர்,திருவாசகமணியின் ஆங்கில முன்னுரைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *