தியாகபிரம்மம் பிறந்த திருவையாற்றில் தன்னிகரில்லாத தமிழ் தாரகையாக திருமதி. டி.பி.இராஜலட்சுமி திகழ்ந்தார்.
பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கு மகளாகப் பிறந்து ஏழு வயதில் திருமணம் செய்து வாழ முடியாது கணவனால் விளக்கப்பட்டவர். இது அந்நாளைய பெண்களுக்கு நேர்ந்த பெரிய அவலமாகும்.
சோர்வடையாமல் தான் கற்ற கலை திறமையால் நாடக உலகத்துக்கு வந்து சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். ஏழு வயதிலேயே நாட்டியம், இசை முதலிய கலைத் திறமையால் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளுடைய ஆதரவினால் டி.பி.இராஜலட்சுமி தைரியமாக நடிக்கத் தொடங்கினார். நாடக உலக நடிப்பு என்று மட்டும் இல்லாமல் தாமே எழுதிய மிஸ். கமலா என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்த பெருமையும் இவரைச் சாரும்.
1936-களில் நாட்டு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பெருமை இராஜலட்சுமியைச் சாரும். கல்வி, கலை, நாட்டியம், படத்தில் நடிப்பது இயக்குவது என்ற சகலகலாவல்லியாக டி.பி.இராஜலட்சுமி திகழ்ந்தார்.
இராஜலட்சுமியின் பெயரைப் பார்த்துதான் இராஜகுமாரி, இராஜதிலகம், இராஜேஸ்வரி என்ற நாடக நடிகைகள் அந்நாளில் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டார்கள்.

Add a Comment