POST: 2013-03-07T21:24:50+05:30

கணினியில் ஒரு மொழியை கொண்டுவர எழுத்துருக்களும், விசைப்பலகையும் முக்கியமோ, அதுபோல மொழிக்கருவிகள் முக்கியமாகும். ஒருவர் தமிழில் ஒரு ஆவணத்தை உருவாக்குகிறார். உருவாக்கிய பின் அதனை சொல்திருத்த வேண்டும். இலக்கண பிழைகளை சரிபார்க்க வேண்டும். தமி்ழ் மொழியைப் பொருத்தவரை சந்தி பிழைகளை சரிபார்க்க வேண்டும். எனவே, இவற்றை தான் மொழிக்கருவிகள் என்கிறோம்.

இதற்கு சொல் பகுப்பான், தொடர் வாக்கிய பிரித்தல் போன்ற கருவிகளை உருவாக்க வேண்டும்.

ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால், ஒரு வினைச்சொல்லுக்கு அதிகபட்சமாக 5 அல்லது 6 வரையே இணைச்சொற்கள் உள்ளன. ஆனால், தமிழில் சில வார்த்தைகளுக்கு 9000 வரை கூட இணைச்சொற்கள் உள்ளன.

எனவே, இதனை தரவுத்தளத்தில் சேமித்து எடுக்க இயலாத விஷயம். அதனால், விதிகளின் அடிப்படையில் இந்த சொல் பகுப்பான் கருவி, தொடர் வாக்கிய பகுப்பான் கருவி தேவைப்படுகிறது.

இந்த பணியை செய்தால் தான் மொழிக்கருவிகள் முழுமையாக செயலாற்றும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *