POST: 2013-03-10T12:20:53+05:30

ஷேக்ஸ்பியருக்கு அமெரிக்கப் பதிப்பும் ஆஸ்திரேலியப் பதிப்பும் அங்கங்கே வாழ்கிறவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழில் திருக்குறளுக்கு இலங்கைப் பதிப்போ, மலேசியப் பதிப்போ, சிங்கப்பூர் பதிப்போ இன்றுவரை வெளிவரவில்லை.

சிங்கப்பூர் பதிப்பு வந்திருந்தால் அவர்களுக்குத் தெரிந்த அச்சு நேர்த்தியில் தீப்பெட்டி அளவுக்கு மெல்லிய பதிப்புக்களை வெளியிட்டிருக்கலாம்.

சிங்கப்பூர் தமிழர்களோடு சீனர்களும்
மலாய்க்காரர்களும் தோளோடு தோள் இணைகிறவர்கள். இவர்கள் அந்தந்த மொழிகளில் தங்கள் இலக்கியங்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்பது என் மனத்தில் படும் எண்ணமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *