POST: 2013-04-26T11:29:50+05:30

கிழிந்த ஓலைகள்,முறிந்த ஓலைகள்,ஒட்டிய
ஓலைகள்,ஒரு பக்கத்திற்கும் மறு பக்கத்திற்கு தொடர்பில்லாத ஓலைகள் என்று அத்தனையும் மின்னாக்கம் செய்யப்பட்டன.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான்,
எடுத்துப்படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.பதுங்கியிருந்ததாக சொல்லி பாதிக்கெடுத்தார்.மிஞ்சுவதற்கு ஒன்றுமில்லாமல் மீளவும் கெடுத்தான்
எழுத்துக்கூட எங்களால் படிக்க முடியவில்லை.

இரைக்காக நெல் கிடைப்பது என்பதற்காக நீட்டிப்ச்சிறையில்லுள்ள கிளி வெளிய வந்து இந்த சீட்டை எடுத்துக்கொடுத்து விட்டது.இது தெரிந்த பிறகும் அறிஞர் மா வே பசுபதி ஊ வே சா வழியில் நடப்பதாக பெருமிதமாக சொல்லி தமிழகத்திலுள்ள முப்பது மாவட்டங்களில் 16,000 மக்களிடம் 5,84,134 ஓலைச்சுவடிகள் இருக்கின்றன்.அவைகளை படிப்பதற்கு அறிஞர்கள் இல்லை என்று வருந்தியிருக்கிறார்கள்.ஆண்டு தோறும் வந்த கணக்கின் படி சென்ற ஆண்டு மையஅரசு 500000 ஓலைச்சுவடிகளை திரட்டியதாக செய்தி.

யானைகள் ஒரு முறைக்கு ஏழு கன்றுகளை ஈனுமென்றும் அது எழு நாள்களை குறிக்கும் என்றும் ஒரு யானை ஒன்பது அங்குலம் இருக்குமென்றும் பீதாம்பர ஐயர் எழுதிய கஜ சாஸ்திரம் கூறுகிறது.

கேட்பவன் முட்டாளாக இருந்தால் கேளம்பாக்கத்தில் அணுகுண்டு வெடித்தது என்பார்கள்.ஓடிப்போய் கேசவன் கையில் பிடித்து அதை தண்ணீர்சாக்கடையில்தூக்கி எறிந்து விட்டார்கள் என்றும் சொல்வார்கள்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *