POST: 2013-05-02T19:44:58+05:30

பல்கலைக்கழகங்களை பாழாக்குவது எப்படி?
———————————————————————————————-
இந்து நாளிதழில் இத்தலைப்பில் ஒரு நல்ல கட்டுரை வெளி வந்துள்ளது.உயர் கல்வித்துறையைச்சார்ந்த அலுவலர்கள் அனைவரும் இந்த ஆய்வறிக்கையை பின்பற்றினால் இந்தியாவிலுள்ள நானூறு பல்கலைக்கழகங்களையும் இடித்து விட முடியும்.

தாமிர ஆலை,கூடங்குளம்,நிலக்கரிச்சுரங்கம் போல பல்கலைக்கழகங்களும் பொது மக்கள் சென்று மறியல் செய்ய வேண்டிய நிறுவனமாக மாறி விடும்.

சென்னையில் திருவல்லிக்கேணியில் எந்தப்பட்டம் வேண்டுமானாலும் எழுபது முதல் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்ற பலகை இருந்தது.

மலிவான பட்டங்கள் தமிழகத்தில் கிடைக்கும் என்பதால் பரஹ்ன்போர்,பவாநகர்,பீகார் முதலிய புரியாத பட்டங்கள் அளிக்கப்பட்டன.போட்டிக்கு வந்தவர்கள் அறிஞர் கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ்யைக் கொண்டு தொடக்கப்பள்ளி முடிக்காதவர்களுக்கு டாக்டர் பட்டங்களை வாரி வழங்கியதில் போட்டி போட்டுக்கொண்டு நீதிபதிகளும்,குற்றவாளிகளும் பட்டம் பெற்றனர்

இந்துவில் வந்த இந்த அறிக்கையை(How to destroy a University? Jayathi Ghosh) எழுத்துக்கு எழுத்து அனைத்துப்பல்கலைக்கழகங்களும் பின்பற்றலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *