POST: 2013-05-22T12:27:26+05:30

ஒரு செருமானிய தொழிலாளிக்கு நிகர் இரண்டு அமெரிக்க தொழிலார்களை அமர்த்தலாம்.அந்த சம்பளத்திற்கு தாய்வான் நாட்டின் தொழிலார்கள் ஐவரை அமர்த்தலாம்.பிரேசில் நாட்டு தொழிலாளர் எண்மரை அமர்த்தலாம்.நல்லது,நம் இந்தியத்தொழிலார்கள் 128 பேரை அமர்த்தலாம்.இது தான் பொருளாதார ஏற்றத்தாழ்வு!

செருமானிய நாட்டுத் தொழிலாளரின் ஒரு மணி நேர சம்பளம் ரூ 1150 ஆகும்.வேதம் வளர்ந்த நாட்டில் வேலை செய்பவர்கள் பற்றற்று வேலை செய்கிறார்கள்.பலர் மாதத்திற்கு நான்கு முறை அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள்.இந்த அழகில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போட்டி போட்டுப்படித்து ஒப்பந்தக்கூலிகளாக உலகை வலம் வருகிறார்கள்.

பொறியியல் படித்தவர்கள் நூற்றுக்கு 6% வேலை கிடைக்கிறது.அண்மையில் ஒரு பொறியியல் கல்லூரியில் வெற்றி பெற்றோர் விழுக்காடு நூற்றுக்கு முப்பது என்று சொல்லியிருக்கிறார்கள்.மீத எழுபது பேர் எந்த வேலைக்கும் தகுதியில்லாதவர்கள் என்று வருந்தி சொல்கின்றனர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *