வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசு கொடி கட்டி பறந்த நேரம்.மேற்கு வங்க சட்டசபையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார்.
பெர்த்வான் மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தமிழர்,மாவட்ட காவல்துறைத்தலைவர் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்,துணை ஆட்சித்தலைவர் மலையாளி,துணைக்காவல் அதிகாரி ராஜஸ்தானை சேர்ந்தவர்,கூடுதல் ஆட்சித்தலைவர் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்.இப்போது மேற்கு வங்கம் வங்காளிகளுக்கு இல்லை என்பது பொருளா? என்று அவையில் கேட்கப்பட்டபோது
உடனே பாசு அவர்கள் எழுந்து இவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?இது போன்ற பிரசாரத்தை வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.
மேற்கு வங்க மாநிலம் அதற்கு இடங்கொடுக்காது என்ற இந்தக்குறிப்பை திரு ஜி பாலச்சந்திரன் இ ஆ ப 2009ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்

Add a Comment