POST: 2014-10-23T09:28:06+05:30

ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)

(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்

தோற்பது என்பது வாழ்க்கையின் இயல்புதான். எனவே, தோற்பதை எண்ணிக்கொண்டிருப்பதை விட இந்தத் தோல்வியை எப்படித் தாண்டுவது, தடைக்கற்கள் உண்டென்றாலும், தடத்தோள் உண்டெனச் சிரித்தாய், இடையூறு பலநூறு வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டும் மனத்திட்பம் இருந்தால் போதும் என்ற வகையிலும், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், என்னுடைய துணைவியார் அப்போது சென்னையில் இருக்கிறார் என்பதனால், அவரைக் கண்டு பேசவேண்டும், இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதனால் சென்னைக்கு எப்படியாவது சென்று சேரவேண்டும் என்று நினைத்தேன். சென்னையில் நான் எப்படிச் சேர்ந்தேன் தெரியுமா?

மனம் சோர்ந்திருந்த நாள், கோவையில் சன்மார்க்க சங்கத்தில் வள்ளல் பெருமான் நூற்றாண்டு விழாவை அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள் நடத்துகிறார்கள். அப்போது கீதா போதகர் என்றும் அருட்பா அரசு என்றும் பாராட்டப்பெற்ற கிருதாரிபிராசாத் அவர்கள், என்னை எங்ககோ, நான் அங்கங்கே அப்போதே பேசிக்கொண்டிருந்தேன். நான் 1955களிலேயே எல்லாக் கல்லூரிகளுக்கும் சென்று பேசுவேன். அந்த ஆர்வத்தில் என்னை அழைத்தார்கள். கோவையில் நண்பகல் 1 மணிக்குப் பேசினேன். அருட்செல்வர் அமர்ந்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் உத்தமர் ஓமந்தூரார் என் அருகிலே இருந்தார். நான் பேசினேன். அதுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைத் தந்தது. எப்படிப் பட்ட மாற்றத்தைத் தந்தது என்றால், நாங்கள் தொடங்கவிருக்கிற இராமலிங்க பணிமன்றத்தில் பணியாற்ற, நீங்கள் நாளையே சென்னை வரலாம் என்ற எனக்கு வாழ்வு தந்தவர் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *